உள்ளூர் செய்திகள்

நிதி ஆலோசகர்(அனலிஸ்ட்)

பொதுமக்கள் தங்களின் பணத்தை லாபகரமாக எவ்வாறு முதலீடு செய்வது என்று நிதி ஆலோசகர் வழிகாட்டுகிறார். அவர்கள், முதலீட்டு குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வதுடன், பிணையத் தொகையின் மதிப்பு, கம்பெனிகள், கம்பெனிகளின் குழுமம் அல்லது தொழில்துறை நிறுவனங்களின் நிதிநிலை குறித்த பகுப்பாய்வை மேற்கொள்கின்றனர். நிறுவனத்தின் எதிர்கால வாய்ப்பு பற்றிய தெளிவான பார்வையை பெறவும், அதன் நிர்வாக செயல்பாட்டை வரையறை செய்யவும், நிறுவன அதிகாரிகளை, நிதி ஆலோசகர் அடிக்கடி சந்திக்கிறார். இத்தகைய சந்திப்புகளுக்கு பிறகு, அவர்கள் என்ன பெற்றார்கள் என்பதைப் பற்றி அறிக்கை எழுதுகிறார்கள் மற்றும் உரை நிகழ்த்துகிறார்கள். இதுபோன்ற விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் , நிதி ஆலோசகர்கள், வாங்குதல், விற்றல் அல்லது வைத்திருத்தல் தொடர்பான முதலீட்டு பரிந்துரைகளை செய்கிறார்கள். தகுதிகள்: பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், பைனான்ஸ், அக்கவுண்டிங் அல்லது புள்ளியியல் ஆகிய பாடங்களில் இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு இத்துறையில் முன்னுரிமை உண்டு. அதேசமயம், எம்.பி.ஏ. அல்லது சான்றிதழ் தகுதியானது, வேலைவாய்ப்பை தக்கவைக்க உதவும். முதலீட்டு வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஓய்வூதிய மற்றும் பிணையத் தொகை நிறுவனங்கள், வியாபார மீடியா மற்றும் பிற வணிக நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. எதிர்கால வாய்ப்புகள்: நிதி ஆலோசகர்களுக்கான வேலைவாய்ப்பு சமீப காலங்களில் மிகவும் அதிகரித்து வருகிறது. வங்கிகளும், பரஸ்பர நிதி நிறுவனங்களும் அதிகளவு நிதி ஆலோசகர்களை பணியமர்த்துகின்றன. ஏனெனில், எந்தமாதிரி பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்க வேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் வழிகாட்டுகிறார்கள். சம்பளம்: இத்துறையில் தகுதியான மற்றும் திறமையான நபர்களுக்கு நல்ல சம்பளம் உண்டு. குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை மாத ஊதியம் பெறலாம். அதேசமயம் நல்ல அனுபவம் உள்ள ஒருவர் லட்சங்களிலும் சம்பளம் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !