உள்ளூர் செய்திகள்

உயர்கல்வி தொடர்பான மாணாக்கர்களின் சில கேள்விகளுக்கான பதில்கள்

1) கே: எனது பெயர் துஷ்யானி. நான் என்.ஐ.டி - குருஷேத்ராவில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் பி.டெக். முதலாமாண்டு படிக்கிறேன். அடுத்த வருடம் முதல் ஐ.டி. துறைக்கு மாற விரும்புகிறேன். ஆனால், இந்த கல்வி நிறுவனத்தின் ஐ.டி. பிரிவானது, ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெறவில்லை என்று கேள்விப்பட்டேன். நான் கேள்விப்பட்டது உண்மையா? ப: உங்களின் ரேங், அந்த படிப்பில் இருக்கும் இடம் மற்றும் கல்வி நிறுவனத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப தாராளமாக பிரிவை மாற்றிக்கொள்ளலாம். என்.ஐ.டி. கல்வி நிறுவனங்கள், இந்திய அரசால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அந்தஸ்தில் இருப்பவை, ஒரு புதிய படிப்பையோ அல்லது கிளையையோ துவங்க, ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி பெறவேண்டும் என்ற அவசியமில்லை. அதேசமயம், ஒரு புதிய வளாகத்தை துவக்க வேண்டுமெனில், அரசின் அனுமதி வேண்டும். எனவே, நீங்கள் படிக்க விரும்பும் ஐ.டி. பிரிவானது, நீங்கள் ஏற்கனவே படிக்கும் வளாகத்திற்குள் இருந்தால் அதில் சேர்வதில் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. உங்களின் பட்டம் செல்லுபடியாகும். 2) கே: நான் மும்பையை சேர்ந்த அம்மு என்ற மாணவி. எனது பள்ளி படிப்பை முடித்தபிறகு, செட் தேர்வையும் முடித்துவிட்டேன். இளநிலை பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்தபிறகு, முதுநிலையில் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் சேர முடியமா? ப: ஏரோஸ்பேஸ் என்பது ஆர்வத்தை தூண்டும் ஒரு படிப்பு. இந்த படிப்பை நீங்கள் பி.டெக். நிலையிலேயே கூட படிக்கலாம். இதற்கான சிறந்த கல்வி நிறுவனம், இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள, திருவனந்தபுரத்திலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ்இன்ஜினீயரிங். அதேசமயம், நீங்கள் பி.எஸ்சி. படிப்பில் பயாலஜி தவிர, இயற்பியல் போன்ற படிப்புகளை முடித்துவிட்டு, அண்ணா பல்கலை போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் 3 வருட பி.டெக். படிப்பை மேற்கொள்ளலாம். இந்த ஏரோஸ்பேஸ் படிப்பை, முதுநிலையிலும், சிறப்பு படிப்பாக படிக்கலாம். பல ஐரோப்பிய பல்கலைகள் இந்த துறையில் பல ஆர்வமூட்டும் படிப்புகளை வைத்துள்ளன. 3) கே: எனது பெயர் அஷ்வின். மெக்கானிக்கல் டிரேட் பிரிவில், அமெரிக்காவில் எம்.எஸ். படிப்பில் சேர விரும்புகிறேன். எந்த கல்லூரி குறைந்த கட்டணம் வசூலித்து, எளிமையான சேர்க்கை நடைமுறையைக் கொண்டு, அதேசமயம் சிறந்த கல்லூரியாகவும் விளங்குகிறது என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன். MIT போன்ற கல்லூரிகளில் நான் MS படிக்க முடியுமா? மேலும், எனது படிப்பிற்கு செலவாகும் மொத்த தொகை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ப: பொறியியலில் மேற்படிப்பு படிக்க, அமெரிக்காவே பலராலும் விரும்பப்படும் இடமாக உள்ளது. அமெரிக்காவில் கல்லூரிகளின் இணைப்பு பெற்ற 3000 பல்கலைகள் இருப்பதால், குறைந்த கட்டணம் கொண்ட கல்லூரியை கண்டுபிடிப்பது கடினம். ஆனால், சராசரியாக 30 முதல் 40 லட்சம் வரை செலவாகும். முதுநிலை படிப்பை பொறுத்தவரை நிறைய உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. 4) கே: எனது பெயர் சுஜாதா. நான், மண்பாண்ட தொழில்நுட்பத்தில் கடந்த 2009 ம் ஆண்டு ஒரு அரசு பல்கலையில் பி.டெக். முடித்தேன். கடந்த ஒன்றரை வருடங்களாக ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். நான் மீண்டும் எனது செராமிக் துறைக்கே திரும்ப முடியுமா? செராமிக் துறையில் அதிக வேலைவாய்ப்புகள் இல்லை என்பதாலேயே, நான் ஐ.டி. துறையை தேர்ந்தெடுத்தேன். ஆனால் செராமிக் துறையில் பணிபுரிய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். எனக்கான வேலைவாய்ப்பை பற்றி கூறுவீர்களா? ப: இது ஒரு சிறப்பு வாய்ந்த தொழில்துறை. ஆனால், இந்தியாவில் இத்தொழில்துறை இன்னும் வளர்ச்சியடையாமல் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. தொழில்துறை மற்றும் வீட்டு உபயோக களிமண் தயாரிப்பு தொழில் வளர்ச்சியடைய இன்னும் சில ஆண்டுகள் ஆகும். எனவே, சூழலுக்கேற்ப உங்களை தயார்செய்து கொள்ளுங்கள். அதேசமயம், தற்போது நீங்கள் பணிபுரியும் ஐ.டி. துறையோ, தொடர்ந்த வளர்ந்துகொண்டே இருக்கும் ஒரு அம்சம். எனவே என்ன முடிவெடுக்கலாம் என்பது உங்கள் கையில்தான் உள்ளது. 5) கே: எனது பெயர் ஜி.கார்க். நான் பி.டெக். மூன்றாமாண்டு படிக்கிறேன். எனது தொழில்துறை பயிற்சியை எப்படி மேற்கொள்வது என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன். இப்போதுவரை எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. எனவே, எங்கு, எப்படி எனது பயிற்சியை பெறுவது என்று கூறுங்களேன். ப: பொதுவாக, தொழில்துறை பயிற்சி என்பது உங்கள் கல்வி நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படுவதாகும். ஆனால் உங்களுக்கு அது ஒத்துவராது என்று தோன்றினால், நீங்கள் தனியாக முயற்சி செய்யலாம். www.letusknow.com அல்லது www.btechguru.com போன்ற இணையதளங்களில் அதுகுறித்த விவரங்களை தேடலாம். இதைத்தவிர, ஒரு கச்சிதமான ரெஸ்யூம் தயாரித்து, உங்களின் வசிப்பிடத்திற்கு அல்லது கல்லூரிக்கு அருகேயுள்ள நிறுவனங்களுக்கு தரலாம். இதனால், உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம். 6) கே: எனது பெயர் ஷதாப். எனக்கு, சாப்ட்வேர் இன்ஜினீயரிங் மற்றும் நெட்-சென்ட்ரிக் கம்ப்யூடிங் ஆகிய 2 படிப்புகளில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த இரண்டில் எதை தேர்வுசெய்தால் இந்தியா மற்றும் சவூதி அரேபியாவில் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும்? ப: இளநிலை படிப்புகளைப் பொறுத்தவரை, குறுகிய நிலையில் செல்வதைவிட, பரந்த நிலையிலான பாடத்தை படிப்பதே சிறந்தது. எனவே இளநிலை படிப்பில், அதிக வாய்ப்புகளைக் கொண்ட சாப்ட்வேர் இன்ஜினீயரிங் படிப்பே சிறந்தது. இதை படித்தால், நீங்கள் ஐ.டி. துறையில் மட்டுமே வேலைதேட வேண்டிய அவசியமில்லை. ஐ.டி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இன்னபிற துறைகளிலும் உங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.        


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !