உள்ளூர் செய்திகள்

அறிவோம் ஐ.சி.எம்.ஆர்.,

இந்தியாவில் மருத்துவம் மற்றும் பயோமெடிக்கல் துறைகள் சார்ந்த ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு, 'இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்'. கடந்த 1911ம் ஆண்டு 'இந்திய நிதி சங்கம்' என்று பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, 1949ம் ஆண்டு தற்போதைய பெயரை பெற்றது.முக்கியத்துவம்இந்தியாவின் முதல் உள்நாட்டு கோவிட்-19 தடுப்பூசியான 'கோவாக்சின்', ஐ.சி.எம்.ஆர்., உடன் இணைந்து பாரத் பயோடெக் தயாரித்துள்ளது முக்கிய சாதனையாக கருதப்படுகிறது. இதுதவிர, உலக சுகாதார அமைப்பு மற்றும் 10 நாடுகளுடன் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளை ஐ.சி.எம்.ஆர்., தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.முக்கிய செயல்பாடுகள்*தொற்று மற்றும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்துதல்*கொரோனா, எய்ட்ஸ், தொழுநோய், மலேரியா, காசநோய் போன்ற நோய்களுக்கான ஆராய்ச்சி மையங்களை நாடு முழுவதும் நிறுவுதல்*ஊட்டச்சத்து குறைபாடுகளை களைதல்*சுகாதார பாதுகாப்பு உத்திகளை உருவாக்குதல்*மருத்துவ கல்லூரிகள் / மருத்துவ பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற ஆராய்ச்சி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சிப் பகுதியை மேம்படுத்துதல்*பல்வேறு ஆராய்ச்சி மையங்களை நிறுவுதல், ஐ.சி.எம்.ஆர்., மற்றும் ஐ.சி.எம்.ஆர்., அல்லாத ஆராய்ச்சி மையங்களுக்கு நிதியுதவி அளித்தல்*கருவுறுதல் கட்டுப்பாடு, தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சேவைகளை வழங்குதல்* புற்றுநோய், இருதய நோய்கள், கண் பார்வையின்மை, நீரிழிவு போன்ற முக்கிய தொற்றாத நோய்களை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது.நிறுவனங்கள்தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம்- பெங்களூரு, தேசிய சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் - போபால், தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - நொய்டா, தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் - டெல்லி, தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் - சென்னை, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இம்யூனோஹெமாட்டாலஜி - மும்பை, நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் அமுல்மெண்டேஷன் ரிசர்ச் ஆன் நோன்-கம்யூனிகபிள் டிசீசஸ் - ஜோத்பூர், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் - சென்னை, தேசிய இனப்பெருக்கம் மற்றும் குழந்தை நல ஆராய்ச்சி நிறுவனம்- மும்பை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐ.சி.எம்.ஆர்.,-ன் முக்கிய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன.உதவித்தொகைஜே.ஆர்.எப்., எனும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்பிற்கான தேர்வை நடத்துவதோடு, உதவித்தொகையாக 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.31,000 வழங்கப்படுகிறது. மேலும், குறுகிய கால மாணவர் உதவித்தொகை, சீனியர் ஆராய்ச்சி பெல்லோஷிப் - எஸ்.ஆர்.எப்., ரிசர்ச் அசோசியேட்ஸ் - ஆர்.ஏ., போன்ற திட்டங்களிலும் உதவித்தொகைகளை வழங்குகிறது.விபரங்களுக்கு: https://main.icmr.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !