உள்ளூர் செய்திகள்

இந்த சந்தேகங்கள் உங்களுக்கு இருக்கின்றனவா?

பிற துறையினரைப் போன்று, சட்டப் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளவர்களுக்கும், தங்கள் துறை சார்ந்த பலவித சந்தேகங்கள் எழுவது இயல்பே. அவர்கள் அவசியம் அறிய வேண்டிய சில பதில்களை இங்கே காணலாம். சட்டப் படிப்பை முடித்தபிறகு, தனியார் துறையில் சட்டப் பட்டதாரிகளுக்கு இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன? இன்றைய நிலையில், இளம் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. பாரம்பரிய நீதிமன்ற பணி வாய்ப்புகளைத் தவிர்த்து, கார்பரேட் நிறுவனங்கள் ஆகியவற்றில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. மேலும், Legal Processing Outsourcing மூலமாக பெருமளவு பணி வாய்ப்புகளைப் பெறலாம். இதுதவிர, IP, Research and arbitration consultancies போன்ற ஸ்பெஷலைஸ்டு அமைப்புகள் பெருமளவு வேலை வாய்ப்புகளை தம்வசம் கொண்டுள்ளன. அனைத்து வழக்கறிஞர்களும் ஒரே மாதிரியான பணியைத்தான் செய்கிறார்களா? நிறுவனத்திற்கு நிறுவனம் பணி நிலைகள் எவ்வாறு மாறுபடுகின்றன? அந்தந்த நிறுவனத்தைப் பொறுத்து சட்டப் பட்டதாரிகளுக்கான பணி நிலைகள் மாறுபடும். சட்ட அமைப்புகள் மற்றும் எல்.பி.ஓ., போன்றவை அசோசியேட்டுகளை பணியமர்த்தும் அதே வேளையில், கார்பரேட் நிறுவனங்கள் லீகல் எக்ஸிகியூடிவ்களை பணியமர்த்தும். சட்டப் பட்டதாரிகளில் பெரும்பான்மையோர் பணிபுரிய விரும்பும் முக்கிய நிறுவனங்கள் எவை? Amarchand Mangaldas, AZB, Luthra & Luthra, JSA, Trilegal and Khaitan & co, HUL, ICICI, ITC, Ernst & Young and PWC, Anand & Anand, Remfry & Sagar, Lall & Sethi, Karanjawala, Oasis, Pangea3, OSC, CPA Global, Clutch group, Lexis Nexis and Manupatra போன்றவை சில முக்கிய நிறுவனங்கள். ஒரு சட்டப் பட்டதாரியால், இன்றைய நிலையில் எந்தளவிற்கு சம்பாதிக்க முடியும். சம்பளம், இடத்திற்கு இடம் அதிகளவில் வேறுபடுகிறதா? சட்ட தொழில்துறைக்குள் எடுத்துக் கொண்டால், பரந்தளவில் சம்பள விகிதங்கள் வேறுபடும். சில வழக்கறிஞர்கள் மிக அதிகளவில் சம்பாதிப்பவர்கள். மேலும், அதிகபட்ச வருமான வரி கட்டுவோர் பட்டியலில், வழக்கறிஞர்களுக்கென்று எப்போதுமே தனியிடம் உண்டு. ஒருவர் எதுபோன்ற கல்வி நிறுவனத்தில் படிக்கிறார் மற்றும் எந்த நிறுவனத்தில் பணியில் சேர்கிறார் என்பதைப் பொறுத்து அவரின் சம்பளம் வேறுபடும். இந்தியாவின் முதல் தர சட்ட மையங்களில் பணிக்கு சேர்பவர்கள், ஆண்டிற்கு ரூ.12 முதல் ரூ.15 லட்சம் வரை எதிர்பார்க்கலாம். அதேசமயம், முக்கிய கார்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுவோர், ஆண்டிற்கு ரூ.6 முதல் ரூ.10 லட்சம் வரை பெறுவார்கள். ஆனால், சில கார்பரேட் நிறுவனங்கள், இந்தியாவின் முதல் தர சட்ட மையங்கள் தரும் சம்பளத்திற்கு நிகராக வழங்குகின்றன. பிரிட்டன் சட்ட மையம் போன்ற சிலவற்றில் பயிற்சி ஒப்பந்தம் அடிப்படையில் பணியாற்றுவோருக்கு, ஆண்டிற்கு, ரூ.30 முதல் ரூ.32 லட்சம் வரை கிடைக்கிறது. சேம்பர் பயிற்சி, சீனியர் கவுன்செல் மற்றும் சாதாரண சட்ட மையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆரம்பநிலை பட்டதாரிகள், பொதுவாக, ஆண்டிற்கு ரூ.1.8 முதல் ரூ.3 லட்சம் வரை சம்பாதிப்பார்கள். கோர்ட்டில் வாதாடும் வழக்கறிஞர் என்னதான் பெரிய கார்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்து அதிக சம்பளத்தை ஒருவர் பெற்றாலும், பெரிய மற்றும் சவாலான வழக்குகளை ஏற்று வாதாடும் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள்தான், அனைத்து வழக்கறிஞர்களையும் விட, மிக அதிகமாக சம்பாதிப்பவர்கள். ஏனெனில், அவர்கள் வழக்கைப் பொறுத்து, எவ்வளவு கட்டணம் கேட்டாலும் கிடைக்கும். ஒரு வழக்கிற்கு, பல லட்சங்கள், ஏன், கோடிகளில்கூட சம்பளம் பெறும் வழக்கறிஞர்கள் உள்ளார்கள். ஆனால், இந்த நிலையை அடைவது, அனைவருக்கும் எளிதன்று. மிகவும் கடினமாக முயற்சி செய்து, சட்ட விஷயங்கள் பலவற்றையும் கரைத்து குடித்து, தனது பகுப்பாய்வு, கூராய்வு மற்றும் ஞாபகத் திறன்களை வளர்த்துக்கொண்டால் மட்டுமே இந்த நிலையை ஒருவர் அடைய முடியும். பொதுத்துறையைப் பொறுத்தவரை, சட்ட பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்புகள் எப்படி? ஒரு காலத்தில், பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை என்ற நிலையிலிருந்த பொதுத்துறை அமைப்புகள், இன்றோ, சட்டப் பட்டதாரிகளால் விரும்பப்படும் இடங்களாக மாறியுள்ளன. பொதுத்துறை சட்ட மையங்களில் பணியாற்றி அனுபவம் பெற்ற வழக்கறிஞர்களுக்கு, அதிக சம்பளம் தருவதற்கு பல தனியார் சட்ட மையங்கள் தயாராக உள்ளன. மேலும், தற்போதைய நிலையில் SEBI, ONGC, IOCL, SAIL போன்ற பொதுத்துறை அமைப்புகள், ஆரம்பநிலை சட்ட பட்டதாரிகளை பணியமர்த்த தயாராக உள்ளன. இன்றைக்கு, அதிகளவில் தேவைப்படும் சட்டத்துறை ஸ்பெஷலைசேஷன் என்று ஏதேனும் இருக்கிறதா? பொதுவாக பார்க்கையில், ஒரு மாணவர் சட்டக் கல்லூரியில் படிக்கும்போதே மேற்கொள்ளும் ஸ்பெஷலைசேஷன், அவரின் எதிர்கால பணிவாய்ப்புகளில் எந்தவித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவதில்லை. எனவே, படிப்பின் இறுதியாண்டில் மேற்கொள்ளப்படும் ஸ்பெஷலைசேஷனை விட, இன்டர்ன்ஷிப், வெளியீடுகள், ஆராய்ச்சி பேப்பர்கள் மற்றும் மாதிரி நீதிமன்ற பயிற்சியில் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க சாதனைகள் ஆகியவையே, நல்ல பணி வாய்ப்புகளைப் பெறுவதில் முக்கிய இடம் பெறுகின்றன. புதிதாக படிப்பை முடித்து வெளிவரும் ஒரு சட்டப் பட்டதாரியிடம், பணி வழங்கும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதிகள் என்ன? படிப்பில் நல்ல மதிப்பெண்கள் மற்றும் சிறப்பான செயல்பாடுகள் ஆகியவைத் தவிர, பகுப்பாய்வுத் திறன், ஆராய்ச்சித் திறன், வரைவுத்திறன் மற்றும் சிறந்த பேச்சு மற்றும் எழுத்து வழி தகவல்தொடர்புத் திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. நல்ல தரமுள்ள இன்டர்ன்ஷிப்புகள், மாதிரி நீதிமன்ற பயிற்சி சாதனைகள், வெளியீடுகள்(publications), போன்றவை, பணிக்கு ஆளை எடுப்பதில் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும், அந்தந்த நிறுவனங்களின் பணித் தன்மைகளைப் பொறுத்தும், ஒருவரின் தகுதி அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. வணிக நிர்வாகம், பொருளாதாரம், அறிவியல் மற்றும் சீனம், பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளில் பெற்றுள்ள திறன் போன்றவற்றுக்கு, நிறுவனங்களைப் பொறுத்து, முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எந்த மாதிரியான மென்திறன்களுக்கு(soft skills) முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது? நல்ல குழுப்பணி திறன், வியாபார நுணுக்கத்திறன், பேரம்பேசும் திறன், பொறுப்புணர்வு, புதிதாக கற்பதற்கு ஆர்வம் போன்றவை முக்கியத்தும் பெறுபவை. பொதுவான அளவில், இன்றைய சட்டத்துறை பணி வாய்ப்புகள் எப்படி? சிவில் மற்றும் கிரிமினல் என்ற இரு நிலைகளில், ஒரு குறுகிய எல்லைக்குள் முடங்கி கிடந்த சட்டத்துறை, கார்பரேட் யுகத்தில், பல பல புதிய பரிணாமங்களை எடுத்துள்ளது. கார்பரேட் சட்டப் பணி என்ற ஒரு அம்சம், சட்டப் பட்டதாரிகளுக்கான பணி வாய்ப்புகளை ஏராளமான அளவில் பெருகச் செய்துள்ளது. சட்டங்களைப் பற்றி சிறப்பாக அறிந்து கொள்வதில், ஒருவருக்கு இருக்கும் கடின உழைப்பு, அதீத ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை, கார்பரேட் நிறுவனங்கள் மத்தியில் அவருக்கான கிராக்கியை அதிகரிக்கும் மற்றும் ஒரு தனிப்பட்ட வக்கீலாக, சிக்கலான வழக்குகளுக்கு மிக அதிக கட்டணம் வசூலிக்கும் ஒரு வழக்கறிஞராகவும் அவர் பரிணமிப்பார். சட்டப் பணியில் நுழையக் காத்திருக்கும் ஒரு புது பட்டதாரி தெரிந்துகொள்ள வேண்டியது? ஒரு வழக்கறிஞர் அல்லது சட்ட சேம்பர் அல்லது முழுசேவை சட்ட அமைப்பு ஆகியவற்றின் கீழ் பயிற்சி பெறுதல், ஒரு புதிய வழக்கறிஞருக்கு நல்ல தளத்தை அமைத்துக் கொடுக்கும். ஒரு வழக்கறிஞரிடம் அல்லது வாத பிரதிவாதத்தில் பணி வாய்ப்புகளைப் பெற, ஒரு புதிய சட்டப் பட்டதாரிக்கு இன்டர்ன்ஷிப்பில் பெறும் பயிற்சியானது, பெரிதும் துணைபுரியும். இது ஒரு பணம் கொழிக்கும் துறையா? சில நிபுணர்கள் கூறும் ஆலோசனை என்னவெனில், இத்துறையில் பணத்துக்கான பணிசெய்யாமல், அந்தப் பணியின் பொருட்டு, உங்களின் பணியை விருப்பத்துடன் மேற்கொள்ளுங்கள் என்கின்றனர். இன்னும் சிலர் சொல்வது என்னவெனில், முதலில் ஒரு ஐந்து ஆண்டுகள் வாத பிரதிவாதத்தில் நல்ல பயிற்சி பெற வேண்டும். இதன்மூலம் பல்வேறான அனுபவங்களை ஒருவர் பெற முடியும். ஆச்சர்யம், அதிர்ச்சி, சந்தோஷம், அனுபவம் ஆகிய அனைத்தும் கிடைக்கும். வழக்கறிஞர் தொழில் என்பது உண்மையிலேயே பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் தொழில்தான். ஆனால், அந்த நிலையை அடைவதற்கு, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஆர்வம் ஆகிய நிலைகளைக் கொண்ட, நீண்ட பாதையை கடந்துசெல்ல வேண்டும். இன்றைக்கு, புகழ்பெற்ற வழக்கறிஞர்களாக திகழ்ந்து, கோடிகோடியாய் சம்பாதிக்கும் பலர், இதுபோன்ற நிலைகளை கடந்து சென்றவர்கள்தான். நாட்டின் புகழ்பெற்ற சில பிரபல சட்டக் கல்வி நிறுவனங்கள் எவை? NLU, JodhpurNLIU, BhopalGNLU, Gandhi nagarSymbiosis, PuneILS, PuneGLC, MumbaiCLC, DelhiNLU, DelhiJGLS, SonepatChrist university, Bangalore.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !