உள்ளூர் செய்திகள்

ஒப்பீட்டளவில் எளிமையான மேட் நுழைவுத் தேர்வு

அகில இந்திய மேலாண்மை சங்கத்தால் நடத்தப்படும் மற்றுமொரு எம்.பி.ஏ., படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எம்.ஏ.டி., தேர்வாகும். பொறுமையும், பயிற்சியுமே, இத்தேர்வை வெல்ல உதவுகிறது. இத்தேர்வு (Management Aptitude Test), பிப்ரவரி, மே, செப்டம்பர் மற்றும் டிசம்பர் என்று வருடத்தில் மொத்தம் 4 முறை நடத்தப்படுகிறது. MAT தேர்வின் மதிப்பெண்கள், நாடு முழுவதும் சுமார் 600க்கும் மேற்பட்ட வணிகப் பள்ளிகளால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எந்த துறையில் பட்டப் படிப்பை முடித்தவர்களும், இத்தேர்வை எழுதலாம். மேலும், இளநிலைப் பட்டப் படிப்பில் இறுதியாண்டு படிப்பவர்களும், MAT தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு எப்படி? இத்தேர்வு, தாள் அடிப்படையிலும்(paper based), கணினி அடிப்படையிலும்(computer based) ஆகிய இரண்டு முறைகளில் நடத்தப்படுகிறது. ஆப்ஜெக்டிவ் கேள்விகள் முறையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. 150 நிமிடங்களுக்குள், மொத்தம் 200 கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். இந்த கேள்விகள் அனைத்தும் மொத்தம் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். Language comprehension, Mathematical skills, Data analysis and sufficiency, Intelligence and critical reasoning, Indian and Global environment போன்றவையே அந்த 5 பிரிவுகள். இத்தேர்வுக்கு தயாராவது எப்படி? எவ்வளவு விரைவாக முடியுமோ, அந்தளவு விரைவாக இத்தேர்வுக்கு தயாராகும் செய்ல்பாட்டைத் தொடங்க வேண்டும். இத்தேர்வுக்காக மிகவும் கடின முயற்சி செய்து படிக்கத் தேவையில்லை என்றாலும், குறைந்தபட்சம் தினமும் ஆங்கில நாளிதழைப் படித்து வர வேண்டும். இதன்மூலம், உங்களின் ஆங்கில வார்த்தை வள அறிவு மற்றும் உலகளவில் என்ன நடக்கிறது என்ற விபரங்கள் தெரிய வரும். MAT போன்ற பிற நுழைவுத்தேர்வுகளுக்கு தயாராக, பலர் கோச்சிங் வகுப்புகள் செல்வதுண்டு. ஆனால், ஒப்பீட்டளவில், மேலாண்மை படிப்பில் சேர்வதற்கு நடத்தப்படும் பிற நுழைவுத்தேர்வுகளை விட  MAT தேர்வு எளிமையான ஒன்று என்பதால், கோச்சிங் வகுப்புகள் செல்லத் தேவையில்லை. இதன்மூலம், கோச்சிங் வகுப்புகளுக்கு செலவழிக்கும் பெரியத் தொகையை மிச்சப்படுத்தலாம். உங்களின் தயாராதலை திட்டமிட்டு, அதற்கு போதுமான நேரத்தை தினமும் ஒதுக்கி, முயற்சி செய்தாலே, இத்தேர்வை வென்று விடலாம். இத்தேர்வின் பிரிவுகள் பற்றி ஒரு அலசல் மொழிப் புரிந்துணர்வு (Language comprehension) இப்பகுதியில், 30 நிமிடங்களுக்குள் எழுதி முடிக்கும் வகையில், மொத்தம் 40 கேள்விகள் கேட்கப்படும். இங்கே, ஆங்கில இலக்கணம், வெர்பல் ரீசனிங், பகுப்பாய்வு, சூழல் சார்ந்த பயன்பாடு(contextual usage), கோடிட்ட இடங்களை நிரப்புதல், குளறுபடியான பாராக்கள்(jumbled paragraphs), வாக்கிய திருத்தம் மற்றும் நிறைவு(sentence correction and completion) உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கியிருக்கும். இப்பகுதியில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க, உங்களின் ஆங்கில மொழித்திறனை வளர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். எனவே, தொடர்ச்சியாக படிக்க வேண்டும் மற்றும் வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தப் பழக வேண்டும். கணிதத் திறன்கள் இங்கே, 40 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் மற்றும் அவற்றை 40 நிமிடங்களில் நிறைவுசெய்ய வேண்டும். இப்பகுதியில், அடிப்படை கணித சிக்கல்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். சாத்தியக்கூறு(probability) மற்றும் மாற்றங்கள்(permutation) ஆகிய பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எனவே, உங்களின் elementary நிலை கணித அறிவை சிறப்பாக வளர்த்துக்கொள்ளவும். Formulae -க்களை மனப்பாடம் செய்தல் மற்றும் shortcut முறைகளை தெரிந்துகொள்வது அவசியம். எனவே, உங்களின் பத்தாம் வகுப்பு கணித புத்தகத்தை வைத்துக்கொண்டு பயிற்சி எடுக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ, அந்தளவு பயிற்சி செய்ய வேண்டும். செய்த தவறுகளை மீண்டும் செய்யாத வகையில் சரிபார்க்க வேண்டும். தரவு பகுப்பாய்வு மற்றும் நிறைவுதிறன் இப்பகுதியில் 40 கேள்விகள் கேட்கப்படும் மற்றும் அவைகளுக்கு 35 நிமிடங்கள் ஒதுக்கப்படும். graphs மற்றும் charts அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். கிராப் என்பது column graphs, bar graphs, line charts, pie charts, venn diagrams என்ற வகைகளில் இருக்கும். நுண்ணறிவு மற்றும் கூராய்வுத் திறன் (Data analysis and Sufficiency) இப்பகுதியில், 40 கேள்விகள் மற்றும் 30 நிமிடங்கள். இப்பகுதியின் கேள்விகள், வலுவான யூகம் மற்றும் அனுமான அடிப்படையில் பதிலளிக்கும் வகையில் கேட்கப்பட்டிருக்கும். உங்களின் தர்க்க மற்றும் நுண்ணறிவுத் திறனை சோதிக்கும் வகையில், சிக்கலான கேள்விகள் கேட்கப்படும். எனவே, முந்தைய ஆண்டுகளின் கேள்வித் தாள்களைப் பார்த்து, அவற்றுக்கு பதிலளித்து பயிற்சிசெய்து பார்க்க வேண்டும். இந்தியா மற்றும் உலகின் சூழல் இப்பகுதியிலும் 40 கேள்விகள் இருக்கும் மற்றும் அவற்றுக்கு பதிலளிக்க 15 நிமிடங்கள் அளிக்கப்படும். நடப்பு நிகழ்வுகள், வணிகம், புகழ்பெற்ற விருதுகள், உலக சாதனைகள், புத்தகங்கள் மற்றும் அதனை எழுதியவர்கள், அறிவியல், வரலாறு, புவியியல், சமூக விஷயங்கள், அரசியல் உள்ளிட்ட பல்வேறான அம்சங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எனவே, பல்வகை செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகை மற்றும் செய்தி புல்லட்டின்களை படித்து, உங்களை சுற்றிய உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும். எழுதத் தொடங்கும் முன்பாக, ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளவும். அப்போதுதான், குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்தையும் நிறைவுசெய்ய முடியும். நேர மேலாண்மையில் சிறப்பு பெற, மாதிரித் தேர்வுகளை அடிக்கடி எழுதிப் பார்ப்பது அவசியம். இத்தகைய பயிற்சிகளின் மூலம், உங்களின் நுணுக்கத்திறன் வளர்வதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. மேலும், தேர்வெழுதும் வேகமும் அதிகரிக்கும். இத்தேர்வு தொடர்பாக, நிறைய படிப்பு உபகரணங்கள், கைடுகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இவைதவிர, சிடி.,க்களும் கிடைக்கின்றன. இத்தேர்வு மதிப்பெண்களை ஏற்றுக்கொள்ளும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள் Accurate institute of management & technologyAIMA - Centre for management educationAmity universityAsia pacific institute of managementBharathiya vidhya bhavan Usha & Lakshmi Mittal institute of managementGalgotias business schoolGuru Nanak institute of managementICFAI universityIILM college of management studiesJaipuria institute of managementLovely professional universityDehradun institute of technologyQuantum school of businessNIILM centre for management studiesJagan institute of management studies.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !