உள்ளூர் செய்திகள்

டிட்டோ - ஜாக் நிர்வாகிகளை அழைத்து பேச அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

மதுரை: போராடும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்வது ஜனநாயக விரோத செயல். டிட்டோ ஜாக் நிர்வாகிகளை அழைத்துப் பேசி தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் வலியறுத்தி உள்ளது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் (பொ) டானியல் ஜெயசிங், பொதுச் செயலாளர் செல்வம் கூறியிருப்பதாவது:டிட்டோ ஜாக் சார்பில் 31 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 4 நாட்களாக டி.பி.ஐ., வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.இதற்காக 13 மாவட்ட ஆசிரியர்கள் சென்னை வரும்போது கைது செய்யப்பட்டனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.இப்போராட்டத்தின் முக்கிய கோரிக்கை, 90 சதவீத ஆசிரியர்களை பாதிக்கும் அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பதே. இதை வலியுறுத்தி போராடும் ஆசிரியர்களை கைது செய்வதை கைவிட வேண்டும்.ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது, தி.மு.க., தலைமையிலான ஆட்சியில் உங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் சொன்னது நினைவில் உள்ளது.எனவே பல்வேறு காலகட்டத்தில் இயக்கம் நடத்தி, அமைச்சருடன் பேச்சு நடத்தி, கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் ஜனநாயக போராட்டம் நடக்கிறது.அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக போலீசார் கைது செய்கின்றனர். அதுமட்டுமின்றி, ஆசிரியர் சங்க வட்ட, மாவட்ட, மாநில நிர்வாகிகளை வீட்டுக்காவலில் கைது செய்ததை ஜனநாயக விரோத செயலாகவே பார்க்கிறோம்.எனவே டிட்டோ ஜாக் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி முதல்வர் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்