உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் அரசு கல்லுாரி பட்டமளிப்பு விழா மாநில உயர்கல்வி துறை அமைச்சர் பங்கேற்பு

ஊட்டி: ஊட்டி அரசு கலை கல்லுாரி பட்டமளிப்பு விழா, பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் துவங்கியது.நிகழ்ச்சியில் கோவிசெழியன் பங்கேற்று, 646 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:மாநிலத்தில், 32 கல்லுாரியில் தேவை என முதல்வரிடம் கேட்கப்பட்டது. அதில், தேர்வு செய்யப்பட்ட, 10 கல்லுாரிகளில், முதல் கல்லுாரி குன்னுாருக்கு ஒதுக்கப்பட்டது.கடைக்கோடி மாணவனும் உயர்நிலைக்கு செல்ல முடியும் என்பதற்காக முதல் படியை ஏற்படுத்திய, தி.மு.க., அரசுதான். 15 சதவீதம் இட ஒதுக்கீடு, நாம் முதல்வர், புதுமைப்பெண் திட்டங்களால் கல்வி மேம்பட்டுள்ளது. ஊட்டி அரசு கல்லுாரியில் இந்த திட்டங்களில் அதிகமாக பயன் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை, 942 ஆக உள்ளது.நம் நாட்டில், யாரும் எதிர்பாராத வகையில், கவர்னருக்கு உள்ள அதிகாரம், பல்கலை கழகங்கள் மற்றும் கல்லுாரியில் தனது ஆளுமையை எந்த அளவுக்கு செலுத்தலாம் என்பதை, சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிப்படுத்தி உள்ளது.துணை வேந்தரை இனி மாநில முதல்வர் நியமிக்கலாம் என மற்ற மாநிலங்களுக்கும் ஒரு வழிகாட்டியான இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. மாணவர்கள் மேல்படிப்பை அதிகம் படித்து, தாய் தந்தையுடன், கல்வி போதித்த ஆசான்களுக்கும் விசுவாசத்தோடு இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். விழாவில், அரசு கொறடா ராமச்சந்திரன், கல்லுாரி முதல்வர் ராமலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்