உள்ளூர் செய்திகள்

குறுகியகால படிப்பை வழங்க ஹாவர்டு பிசினஸ் ஸ்கூல் மற்றும் ஐ.ஐ.எம். அகமதாபாத் கூட்டு

இந்திய வருமானவரித் துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளுக்கு, 4 வார காலஅளவுள்ள எக்சிகியூடிவ் கல்வியை வழங்கும் வகையில், ஹாவர்டு பிசினஸ் ஸ்கூல்(HBS) கல்வி நிறுவனத்துடன், ஐ.ஐ.எம்., அகமதாபாத் இணைந்து செயல்படவுள்ளது. தலைமைத்துவத்தின் பலவிதமான அம்சங்கள், பெரிய நிறுவனத்தில் மேலாண்மையை மாற்றுவது குறித்த விஷயம் மற்றும் பொது மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், மேற்கண்ட குறுகியகால படிப்பில் இடம் பெறக்கூடியவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பிற்கு மொத்தம் 30 அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள். வருமானவரித் துறையில், முதன்மை கமிஷனர் மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையிலுள்ள அதிகாரிகள் இதில் பங்கேற்கலாம். இவர்கள், 2 வாரங்கள் ஐ.ஐ.எம்., அகமதாபாத்திலும், 2 வாரங்கள் ஹாவர்டு பிசினஸ் ஸ்கூலிலும் செலவழிப்பார்கள். இதுபோன்ற ஒரு படிப்பை வழங்குவதற்காக, HBS, ஒரு இந்திய கல்வி நிறுவனத்துடன் மேற்கொள்ளும் முதல் ஒப்பந்தம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்