கல்வி தரத்தை மேம்படுத்த தேசிய கல்வி மற்றும் திட்ட பல்கலை சார்பில் பணிமனை
தேனி: கல்வி தரத்தை மேம்படுத்த தேசிய கல்வி மற்றும் திட்ட பல்கலை சார்பில் டிச., 8 முதல் ஆறு நாட்கள் பணிமனை நடக்கிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளும் எதிர்நோக்கும் பிரச்னைகள், தேர்ச்சிவிகிதம், மாணவர்கள் சேர்க்கை குறைவு, பள்ளி நிர்வாகம் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக உரிய காரணிகளை கண்டறிந்து மேம்படுத்த, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்ககம் சார்பில் திறன் வளர் பணிமனை நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 40 பேர் கொண்ட குழுவினருக்கு ஆண்டு திட்டம் மற்றும் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க தேசிய கல்வி மற்றும் திட்ட பல்கலை (என்.யு.இ.பி.ஏ.) பயிற்சி அளிக்க உள்ளது. சென்னையில் டிச.,8 ல் துவங்கும் இந்த பயிற்சி டிச.,13 வரை நடக்கிறது. இந்தியாவில் முதன் முதலாக தமிழகத்தில் முன்னோடி பயிற்சி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.