உள்ளூர் செய்திகள்

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வெழுதியோர் மதிப்பெண் சான்றிதழ் பெற அழைப்பு

கோத்தகிரி: குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரியில், தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, கோத்தகிரி டயட் முதல்வர் முனைவர் தேவராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடப்பாண்டில், தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கான, அசல் மதிப்பெண் சான்றுகள் கோத்தகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் (டயட்) கடந்த, 24ம் தேதி முதல், வழங்கப்பட்டு வருகின்றன. இதனை தேர்வெழுதியவர்கள், பெற்றுச் செல்லலாம்.மேலும், 2015 ஜூன் மாதத்தில் தேர்வெழுத விருப்பும் தனித் தேர்வர்கள், ஜனவரி 19ம் தேதிமுதல் 24ம் தேதிவரை கோத்தகிரி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சில பாடங்களில் தோல்வி அடைந்தவர்களும் மீண்டும் தேர்வெழுதலாம். கடந்த ஜூன் மாதத்தில் தேர்வெழுதி தற்போது மதிப்பெண் சான்றிதழ் பெற்றவர்கள், மறுக்கூட்டல் செய்ய விரும்பும் பட்சத்தில், இன்று முதல் (30ம்தேதி), வரும் ஜனவரி 5ம் தேதிவரை டயட் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு தேவராஜ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்