உள்ளூர் செய்திகள்

தோல்வியடைந்த மாணவர்கள் தொழிற்கல்வி படிக்க வாய்ப்பு அரசு ஐ.டி.ஐ., துணை இயக்குனர் தகவல்

கடலுார் : பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தொழில் சார்ந்த பாடப்பிரிவுகள் உள்ளது என, கடலுார் அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் பரமசிவம் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் சிலர் குழப்பமான மன நிலையில் இருப்பர். அவர்கள் தொழிற்கல்வியில் சேர்ந்து படித்து, வேலை வாய்ப்பை பெறலாம்.பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணை பெற்றோர் ஏற்றுக் கொள்ள வேண்டும். பிற மாணவர்களுடன் ஒப்பிடக்கூடாது. மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை. வெற்றி, தோல்வி சகஜம். தோல்விடையந்த மாணவர்கள் மனம் தளராமல் தைரியமாக இருக்க வேண்டும்.துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். தோல்விடையந்த மாணவர்களுக்கு 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஏராளமான தொழில் சார்ந்த பாடப்பிரிவுகள் உள்ளன. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்து படித்துக் கொண்டே பிளஸ் 2 தேர்வை எழுத வாய்ப்பு உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்