புதிய மருத்துவ கல்லுாரிகளில் சீனியர் ஆய்வுக்கூட நுட்புனர்கள் நியமிக்க மாநாட்டில் வலியுறுத்தல்
மதுரை : மதுரையில் மருத்துவ ஆய்வுக்கூட நுட்புனர்கள் சங்க அறிவியல் மாநாடு, கண்காட்சி நேற்று நடந்தது. அமைப்புச் செயலாளர் மரியதாஸ் வரவேற்றார். மதுரை மருத்துவ கல்லுாரி பேராசிரியர் சிந்தா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாநாட்டு மலரைஓய்வு பெற்ற மதுரை மருத்துவ கல்லுாரி டீன் ரத்தினவேல் வெளியிட, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயப்பாண்டி பெற்றார்.நிகழ்ச்சியில் மருத்துவ ஆய்வுக்கூட உரிமையாளர்கள் சங்க தலைவர் நசீர் ஹூசைன், ஆலோசகர் செல்லம், துணை மருத்துவ ஆய்வுக்கூட உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆனந்த், சீனியர் லேப் டெக்னாலஜிஸ்ட் பெர்னாட்ஷா, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மூத்த மேலாளர் பாண்டியராஜன் பங்கேற்றனர்.காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய மருத்துவ கல்லுாரிகளில் ரெகுலர் பணியிடங்களில் சீனியர் ஆய்வுக்கூட நுட்புனர்களை நியமிக்க வேண்டும். கிரேட் 1 நிலையில் உள்ளவர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 ஆண்டுகளாக பணியாற்றும் கிரேட் 3 நிலையில் உள்ளவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.