உள்ளூர் செய்திகள்

வாக்குறுதி நிறைவேற்றாவிடில் தேர்தலில் விளைவு தெரியும்! டிட்டோ - ஜாக் எச்சரிக்கை

திருப்பூர்: கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், அதன் விளைவுகள், வரும் 2026 தேர்தல் முடிவில் பிரதிபலிக்கும் என, டிட்டோ - ஜாக் மாநில துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்பட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ- ஜாக்) சார்பில், தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் நேற்று மறியல் போராட்டம் நடந்தது.திருப்பூரில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில், தொடக்க பள்ளி ஆசிரியர்கள், 450 பேர் திரண்டு, மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தை துவக்கி வைத்து, டிட்டோ ஜாக் மாநில துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் பேசியதாவது:தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழகம் முழுவதும் அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உட்பட, பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிட்டோஜாக், சார்பில் மூன்று நாட்கள் தொடர் மறியல் போராட்டம் துவங்கப்பட்டுள்ளது.அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும், இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளையெல்லாம், மறத்துவிட்டனர்.ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால், அதன் விளைவுகள், வரும் 2026 சட்டசபை தேர்தல் முடிவில் பிரதிபலிக்கும். எனவே, அரசு, எங்களை உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்; தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்