உள்ளூர் செய்திகள்

தமிழ் மொழியில் நிர்வாகப் படிப்பு - சென்னை பல்கலை.யில் அறிமுகம்

சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கு வசதியாக, புதிதாக தமிழ் மொழியில் எம்.ஏ., பொது நிர்வாகப்படிப்பு வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். ராமச்சந்திரன் தெரிவித்தார். இப்படிப்புக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.4,800. புதுடில்லி, அமிர்தசரஸ், காசர்கோடு, சில்லாங் ஆகிய நான்கு இடங்களில் தொலைநிலைக் கல்வி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் சேப்பாக்கம், கிண்டி வளாகங்களில் ரூ.90 லட்சம் செலவில் லாங்க்வேஜ் லேப் அமைக்கப்படும். சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வக உபகரணங்கள் வாங்க ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஐந்து ஆண்டுகளுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழக மானியக் குழு ஒதுக்கீடு செய்துள்ள 100 கோடி ரூபாயில் 30 கோடி ரூபாய் தற்போது கிடைத்துள்ளது என்றும் ராமச்சந்திரன் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்