உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு கவிதை இயற்றும் திறன் வளர வேண்டும்: காரைக்குடி பல்கலை துணைவேந்தர்

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் "உலக கவிதை நாள் விழா" நடந்தது. விழாவில் பல்கலை துணைவேந்தர் சேது சுடலைமுத்து பேசியதாவது: மாணவர்களுக்கு கவிதை இயற்றும் திறன் வளர வேண்டும். கவிதை எழுதுவதற்கான தூண்டுதல்களை பெறவேண்டும். கவிதை படைப்பதற்கான பயிற்சியையும், வாசிக்கும் ஆர்வத்தையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அழிவில்லாத உண்மைகளையும், ஆழமான கருத்துக்களையும் வெளிப்படுத்துவது கவிதை. ஒரு கவிஞனுக்கு உலகளாவிய நோக்கு, முறையான பயிற்சி, பிற மொழிகளோடு ஒப்பிடும் திறன் முதலிய பண்புகள் இருக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்