வாலிபால் போட்டி - திருவள்ளுவர் அரசு பள்ளி அணி வெற்றி
அவிநாசி: அவிநாசி குறுமைய அளவிலான வாலிபால் போட்டியில், பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு பள்ளி அணி வெற்றி பெற்றது. அவிநாசி குறுமைய விளையாட்டு போட்டி, பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு பெண்கள் வாலிபால் இறுதி போட்டியில், பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியுடன், குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணி மோதியது. அதில், 2-1 என்ற புள்ளிக்கணக்கில், திருவள்ளுவர் அணி வெற்றி பெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. வெற்றி பெற்ற அணியினரையும், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜன், பொன்னரசி, அவிநாசிலிங்கம், நாகராஜ் ஆகியோரையும், தலைமை ஆசிரியர் குமரேசன், பள்ளி வளர்ச்சிக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.