கடுமையான தவறு செய்யும் மாணவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப உத்தரவு
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பள்ளி வகுப்பறையில் மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதனை தடுக்க, குற்றச் சம்பவத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பதினெட்டு வயதிற்கு குறைவான மாணவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு வழிகாட்டுதல்கள் கூறப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்புமாறு மாவட்ட போலீஸ் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் குற்றம் செய்யும் ஓரிரு மாணவர்களை பிரித்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்புவதால், அப்பள்ளியில் மற்ற மாணவர்கள் நிம்மதியாக படிக்க வழி ஏற்படுத்த முடியும் என அந்த குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.