ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளை திறக்கும் முடிவை ம.பி., அரசு எடுக்காது
போபால்: மத்தியப் பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. கொரோனா நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டங்களாக முயற்சிகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில், பாதுகாப்பு நடைமுறைகளுடன் பள்ளிகளை திறக்கலாம் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. மத்தியப் பிரதேசத்தில் உயர்ந்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், மாநிலத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளை இப்போது மீண்டும் திறக்க வேண்டாம் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முடிவு செய்துள்ளார்.இது குறித்து மத்திய பிரதேச கல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மர் கூறுகையில், பாதுகாப்பு விதிமுறைகளுடன் பள்ளிகளை திறக்கலாம் என்றும் அதற்கான வழிகாட்டுதல்களும் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. "அக்., 15 ஆம் தேதிக்கு பிறகு ஆரம்ப (1 முதல் 5 வரை) மற்றும் நடுத்தர (6 முதல் 8 வகுப்புகள்) பள்ளிகளை மீண்டும் திறக்கும் அபாயத்தை நாங்கள் எடுக்கப் போவதில்லை". நோய் பாதிப்புகளுக்கு மத்தியில், ஆரம்ப மற்றும் நடுநிலை மாணவர்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறப்பது ஆபத்தானது. பள்ளிக்கு வரும் குழந்தைகளில் யாரேனும் ஒருவர் பாதிக்கப்பட்டாலும், அதற்கான முழு பொறுப்பும் மாநில அரசை சேரும்.கொரோனா தொற்றுக்கான வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுவதுடன் ம.பி., அரசு செப்.,21 முதல் வரையறுக்கப்பட்ட ( 9 முதல் 12 ஆம் வகுப்பு) வரையிலான மாணவர்களுடன் பள்ளிகளை ஓரளவு மீண்டும் திறந்துள்ளது என்பதை நினைவு கூரலாம். மத்தியப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகள் உட்பட சுமார் 1.50 லட்சம் பள்ளிகள் உள்ளன. இவ்வாறு கூறினார். ம.பி.,யை தொடர்ந்து, சாதாரண வகுப்புகள் மீண்டும் தொடங்குவது குறித்து கோவா அரசாங்கமும் தீர்மானிக்கப்படவில்லை. முதல்வர் பிரமோத் சாவந்த், சமீபத்தில் ஆசிரியர்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்த பின்னரே இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.இதற்கிடையில், மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, பாதுகாப்பு நடைமுறைகளுடன் அக்.,15 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்று உத்தரப் பிரதேச அரசு நேற்று (அக்.,11) கூறியது. ஆயினும் பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு, எழுத்துப்பூர்வமாக பெற்றோர் அனுமதி அளிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் சுகாதார நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக 2 ஷிப்ட்டாக பள்ளிகள் நடத்தப்படும். அனைவரும் மாஸ்க் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.