உள்ளூர் செய்திகள்

விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை ஜிம்மா பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சேலம்: ஜிம்மா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(ஜே.ஐ.டி.,), ஜிம்மா பல்கலை, எத்தியோப்பியா மற்றும் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை, சேலத்தில் கடந்த ஏப்., 30ல், பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை கல்வி பரிமாற்றத்துக்கு சாத்தியமான ஒத்துழைப்புக்காகவும், ஜே.ஐ.டி., மாணவர்கள், ஆசிரியர்களுக்கான ஆராய்ச்சி வாய்ப்புகளுக்காகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.ஜே.ஐ.டி., ஜிம்மா பல்கலை ஊழியர்களின் திறமை, முக்கிய துறைகளில் அறிவை மேம்படுத்துவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் எத்தியோப்பியாவின் ஜிம்மா பல்கலை, ஜே.ஐ.டி., அறிவியல் இயக்குனர் எப்ரம் வக்ஜிரா, சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை பேராசிரியர் சபரிநாதன் கையெழுத்திட்டனர்.இது, பல்கலை துணைவேந்தர் சுதிர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மணிவண்ணன், இயக்குனர்கள் ஜெய்கர்(மருத்துவ சோதனை), ஐ.க்யூ.ஏ.சி., ஞானசேகர், துணை இயக்குனர் ராஜன் சாமுவேல்(அகாடமிக்ஸ்), டாக்டர் டேவோட்ராஸ் பீலே, டீன், டாக்டர்.ஹகின்ஸ் ராஜ், பேராசிரியர், பயோமெடிக்கல் இன்ஜினியரிங், (ஜே.ஐ.டி.,), ஜிம்மா பல்கலை, எத்தியோப்பியா, அனைத்து கல்லுாரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், பல்கலை அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்