உலகின் டாப் நிறுவனங்கள் பட்டியல் ரீலிஸ்: எந்த நிறுவனம் சிறந்தது தெரியுமா?
புதுடில்லி: உலகின் சிறந்த நிறுவனங்களின் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் எச்.சி.எல்., டெக், அதானி குழுமம், ரிலையன்ஸ் ஆகியவை இடம்பிடித்துள்ளது.அமெரிக்காவில் இருந்து மாதம் இருமுறை வெளியாகிறது டைம் இதழ். டைம் இதழ் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்களை ஆய்வு செய்து பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இந்தாண்டிற்கான தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், 1000 நிறுவனங்கள் உள்ளன. இதில் 22 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.எச்.சி.எல்., டெக் நிறுவனம் 112வது இடத்தையும், விப்ரோ நிறுவனம் 134வது இடத்தையும், அதானி குழுமம் 736வது இடத்தையும், முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் 646வது இடத்தையும் பிடித்துள்ளன. மகேந்திரா குழுமம் 187வது இடத்தையும், லார்சன் நிறுவனம் 549வது இடத்தையும், கீரோ மெட்ரோ கார்ப் நிறுவனம் 597வது இடத்தையும் பிடித்துள்ளன.பல வங்கி நிறுவனங்களும் பட்டியலில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது. அதன் விபரம்: ஆக்சிஸ் வங்கி 504வது இடத்தையும், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 525வது இடத்தையும், கோட்டக் மஹிந்திரா வங்கி 551 இடத்தையும் பிடித்துள்ளன. டாப் நிறுவனங்கள் விவரம் பின்வருமாறு:* எச்.சி.எல்., டெக், ரேங்க்- 112, மதிப்பெண்-91.75.* இன்போசிஸ், ரேங்க்- 119, மதிப்பெண்-91.55.* விப்ரோ, ரேங்க்- 134, மதிப்பெண்-91.29.* மஹிந்திரா குரூப், ரேங்க்- 187, மதிப்பெண்-90.57.தமிழகத்தில் பி. எச். டி., படிப்புகளின் தரம் : கவர்னர் ரவி அதிருப்திதமிழகத்தில் பி. எச். டி., படிப்புகளின் தரம் : கவர்னர் ரவி அதிருப்தி* ஆக்சிஸ் பேங்க், ரேங்க்- 504, மதிப்பெண்-86.72.* பாரத ஸ்டேட் வங்கி, ரேங்க்- 518, மதிப்பெண்-86.56.* ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ரேங்க்- 525, மதிப்பெண்-86.43.* லார்சன் அன்ட் டூப்ரோ, ரேங்க்- 549, மதிப்பெண்-86.10.* கோடக் மஹிந்திரா பேங்க், ரேங்க்- 551, மதிப்பெண்-86.10.* ஐ.டி.சி., லிமி டெட், டெக், ரேங்க்- 586, மதிப்பெண்-85.60.* ரிலையன்ஸ், ரேங்க்- 646, மதிப்பெண்-84.87.* அதானி குரூப், ரேங்க்- 736, மதிப்பெண்- 83.72.* பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ரேங்க்- 987, மதிப்பெண்- 73.69.