உள்ளூர் செய்திகள்

எதிர்ப்பை மீறி நாளை இடமாறுதல்; கவுன்சிலிங் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் கொந்தளிப்பு

புதுச்சேரி: போராட்டத்தால் நிறுத்தப்பட்ட தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கவுன்சிலிங் நாளை 18 ம் தேதி நடக்கும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.புதுச்சேரி, காரைக்காலில் பணி புரியும் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் கடந்த மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கும் என பள்ளி கல்வித் துறை அறிவித்தது. இதற்காக 245 தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேர்காணல் அழைப்பு அனுப்பப்பட்டது.அதன்படி 29ம் தேதி கிராமப்புற ஆசிரியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டனர். 30ம் தேதி நகர்புற தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நடந்தபோது குறைபாடுகளை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குளறுபடிகளை சரி செய்த பிறகு இட மாறுதல் கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் நகரபுற தமிழ் ஆசிரியர்கள் இடமாறுதல் நடக்கவில்லை.இதற்கிடையில், போராட்டத்தால் நிறுத்தப்பட்ட தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கவுன்சிலிங் நாளை 18 ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.இது தமிழ் பட்டதாரிகள் ஆசிரியர் மத்தியில் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினியைசந்தித்து நேற்று முறையிட்டனர்.ஆனால் எந்த தீர்வு எட்டப்படவில்லை. எனவே அடுத்த கட்ட போராட்டத்திற்கு ரெடியாகி வரும் தமிழாசிரியர்கள், முதல்வர் ரங்கசாமி, கல்வித் துறை அமைச்சரை சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்