உள்ளூர் செய்திகள்

ஏ.ஐ., தொழில்நுட்பம் வந்தாலும் ஆசிரியர்கள் பணி மிகவும் முக்கியம்: மோகன் பகவத்

நாக்பூர்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சகாப்தத்திலும் ஆசிரியர்கள் தொடர்ந்து முக்கிய பங்காற்றுவார்கள், என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறினார்.நாக்பூரில் சோமல்வார் கல்விச் சங்கத்தின் 70வது நிறுவன தின விழாவில் மோகன் பகவத் பேசியதாவது:தற்போதைய தலைமுறையினர் தொழில்நுட்பத்தின் காரணமாக நிறைய அறிவைப் பெற்றுள்ளனர். வாழ்க்கையை மாற்றும் ஆற்றல் ஆசிரியர்களுக்கு உண்டு.பார்ப்பதும், கவனிப்பதும் கற்றல். படிப்பதன் மூலமும், கேட்பதன் மூலமும் நாம் தகவல்களைப் பெறலாம். உங்களிடம் உள்ள தகவல்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பார்ப்பதிலும் கவனிப்பதிலும் இருந்து கற்றுக் கொள்ளப்படுகிறது.நெறிமுறைகள் இல்லாத அறிவியல் பாவம் என்ற மகாத்மா காந்தியின் கட்டளையையும் நினைக்க வேண்டும். தொழில்நுட்பம் முக்கியமானது மற்றும் அதன் முன்னேற்றம் மனிதர்கள் வேகமாகவும் துல்லியமாகவும் செயல்பட உதவும். ஆனால் அதை திறம்பட பயன்படுத்த வேண்டும்.ஒவ்வொரு மாணவரும் வித்தியாசமாக இருக்கிறார்கள். தகவல் அனைவருக்கும் தேவை என்றால், கூகுள் இருக்கிறது. ஆனால் கற்பிக்க, ஆசிரியர்கள் இன்றியமையாதவர்கள்.சில சமயங்களில் அறிவு என்ற போர்வையில் பொய் பரப்பப்பட்டு, திரிக்கப்பட்டு உண்மைகள் வரலாற்றின் போர்வையில் புதைக்கப்படுகின்றன. எனவே அறிவை ஆராய்ந்து பின்னர் உள்வாங்க வேண்டும்.ஆகவே, சேர்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்தாலும் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர்கள் தொடர்ந்து முக்கிய பங்காற்றுவார்கள்.இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்