உள்ளூர் செய்திகள்

மாதிரி பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி பள்ளி; கல்வித்துறை திட்டம்

உடுமலை : அரசு மாதிரி உண்டு, உறைவிட பள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை பயிற்சி வழங்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.தமிழக அரசு, மாதிரி உண்டு உறைவிட அரசுப்பள்ளிகளைகடந்த, 2021 - 22ம் கல்வியாண்டில் துவக்கியது. தற்போது, 38 மாதிரி அரசு உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.எட்டாம் வகுப்புகளில் வகுப்பறை கல்வி மட்டுமில்லாமல், இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படும் மாணவர்கள் கண்டறியப்பட்டு,மாதிரி பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.இம்மாணவர்களுக்கு, இப்பள்ளிகளில் உணவு மற்றும் தங்கும் வசதி வழங்கப்படுகிறது.இங்கு படிக்கும் மாணவர்களின் உயர்கல்விக்கான கட்டணங்களையும் மாநில அரசு வழங்குகிறது.இப்பள்ளிகளில் மாணவர்கள் தனித்திறன்கள் மட்டுமின்றி, போட்டித்தேர்வுகளிலும் வெற்றி பெறுவதற்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.மாதிரிப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: மாதிரி உண்டு, உறைவிட பள்ளி மாணவ, மாணவியர், தேசிய அளவிலான நுழைவு மற்றும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கின்றனர்.அவர்களுக்கு பயிற்றுவிக்கும் வகையில், மாதிரி பள்ளி ஆசிரியர்களின் திறன்களையும் மேம்படுத்த வேண்டியுள்ளது.இதற்காக, ஐ.ஐ.டி., போன்ற பல்கலை., பேராசிரியர்கள், நிபுணர்கள் வாயிலாக மாதிரி பள்ளி ஆசிரியர்களுக்கு நடப்பாண்டில் சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பயிற்சி பெறும் ஆசிரியர்களின் பட்டியல் தயார்படுத்த, பள்ளிகளில் கேட்கப்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்