உள்ளூர் செய்திகள்

அனைத்து அரசு போட்டி தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு!

ராமநாதபுரம்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வாளர்களுக்கு அந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்ற பலர் அரசு போட்டிகளில் வெற்றிபெற்று பல்வேறு இடங்களில் பணிபுரிகின்றனர்.தற்போது குறிப்பிட்ட தேர்வுக்கு மட்டும் அல்லாமல் மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள அனைத்து பணியிடங்களுக்கும் தயாராகி வரும் போட்டித் தேர்வாளர்களுக்கு ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் கூறியதாவது:எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ்., டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட அனைத்து அரசுப் பணி போட்டித் தேர்வு எழுத உள்ள தேர் வாளர்கள் பயன்பெறும் வகையில் பொதுவான பாடங்களுக்கு தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் டிச., 1 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற உள்ளது.இதில் பங்கேற்க விருப்பமுள்ள போட்டித் தேர்வுக்கு விண்ணப் பித்து தயாராகும் நபர்கள் தங்களது புகைப்படம் மற்றும் சுயவிபரங் களுடன் நேரடியாக அல்லது 04567 - 230 160 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்