உள்ளூர் செய்திகள்

கலைத்திட்ட வடிவமைப்பு பாடத் திட்டம் தீர்மானிக்க விரைவில் கருத்து கேட்பு கூட்டம்

கோவை: கோவையில் தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்பு பாடத்திட்டம் சார்ந்த மண்டல அளவிலான கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த திட்டமிட் டுள்ளனர்.வேகமாக மாறிவரும் தொழில் நுட்ப முன்னேற்றம், சமூக மாற்றம், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள புதுமைகளின் அடிப்படையில் கலைத்திட்ட வடிவமைப்பை மறுகட்டமைப்பு செய்து புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.மறு கட்டமைப்பு செய்யப்படும் பாடத்திட்டம் கலைத்திட்டம் உள்ளடக்கியதாகவும், அரசியலமைப்பு மதிப்புகளான பண்பாடு, சுற்றுச்சூழல் கல்வி, எதிர்கால திறன் மற்றும் சமூக மன எழுச்சியுடன் தொடர்புள்ளதாகவும் இருப்பது அவசியம் என்பதால், கருத்து கேட்பு கூட்டம் நடத்தி கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் இணைந்து செயல்படுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் பங்கேற்கும் கருத்து கேட்பு கூட்டத்தை பிப்., 10ம் தேதிக்குள் நடத்த வேண்டும், என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்