உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி: இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், எல்.கே.ஜி., வகுப்பில் குழந்தைகளுக்கான சேர்க்கை துவங்கி உள்ளது. அனைத்து சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், சிறுபான்மையற்ற மெட்ரிக் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி.,யில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இதற்கான இணையவழி விண்ணப்பப்பதிவு வரும் 18ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவரின் பிறப்புச் சான்றிதழ், ஆதார் கார்டு, சாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் தேவையான ஆவணங்கள். கடந்த 2022 ஆக., 1 முதல் 2023 ஜூலை 31 வரை பிறந்த குழந்தைகள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியிலிருந்து 1 கி.மீ., சுற்றளவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்