உள்ளூர் செய்திகள்

தீபாவளிக்கு ஒரு நாள் விடுமுறை : விடுதி மாணவர்கள் பாதிப்பு

தீபாவளிப் பண்டிகையின் போது இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும். அந்த நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களையொட்டி வந்தால் மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். இந்த முறை புதன்கிழமை தீபாவளி வருவதால், புதன்கிழமை மட்டுமே விடுமுறை அறிவித்துள்ளது. பள்ளிகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பள்ளி வேலை நாட்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் பள்ளிக் கல்வித்துறை உள்ளதால் ஒரு நாள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் ஒரு நாள் விடுமுறைக்காக சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. தீபாவளி நாளில் பஸ் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பஸ் கிடைப்பது சிரமமாகும். இரவு முழுவதும் பஸ் பயணத்தில் செலவிடும் நிலை ஏற்படும். பலர் தீபாவளி கொண்டாட வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு கூடுதலாக ஒரு நாள் விடுமுறைக்கு, பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்