உள்ளூர் செய்திகள்

இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தஞ்சையில் பாரம்பரிய கலைகள் முகாம்

இது குறித்து தஞ்சை பாரத ஸ்டேட் வங்கி துணை பொதுமேலாளர் கஸ்தூரி ரெங்கன் மற்றும் தஞ்சை கலை ஆயம் அமைப்பு கவுரவ செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் கூறியதாவது: "பாரம்பரிய கலைகள் குறித்து இன்றைய இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, "இளங்கதிர் 2013" எனும் பெயரில் திருவிழா, தஞ்சையிலுள்ள தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் நடக்கிறது. இவ்விழா இன்று துவங்கி, 14ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடக்கிறது. முதல்நாளில் செவ்வியல் குரலிசை, செவ்வியல் கருவி இசை (தவில், நாதஸ்வரம், வயலின்), நாட்டுப்புற பாடல் மற்றும் கருவி இசை உள்ளிட்ட போட்டிகளும், இரண்டாம் நாளில் பரதநாட்டியம் (தனி மற்றும் குழு), நாட்டுப்புற நடனம் ஆகிய போட்டிகளும், மூன்றாம் நாளில் நாடகபோட்டி (தனி மற்றும் குழு), தமிழ் மற்றும் ஆங்கில மொழி என, இரு பிரிவுகளாக நடக்கிறது. இதில், 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். போட்டிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, தென்னக பண்பாட்டு மையத்தில் நடக்கும். மேலும் தமிழக பாரம்பரியம் குறித்த ஓவியம், ஃபோட்டோ போட்டி, சிற்பம், குறும்பட போட்டி உள்பட காட்சி கலைப்போட்டிகளும் நடத்தப்படும். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, 14ம் தேதி மாலை 4 மணிக்கு தென்னக பண்பாட்டு மையத்தில் நடக்கும் நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும். தமிழகத்தில் புகழ்பெற்ற இளம் கலைஞர்கள் பங்கேற்கும் இசை, நாட்டியம், நாடக நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி ஏற்பாட்டில் தென்னக பண்பாட்டு மையம், கலை பண்பாட்டுத்துறை, இந்திய தேசிய பாரம்பரிய கலை பண்பாட்டு அறக்கட்டளை (இன்டாக்) ஆகிய அமைப்புகள் உதவியுடன், கலை ஆயம் அமைப்பு இணைந்து மேற்கொண்டுள்ளது. மேலும், விபரம் அறிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் கவுரவ செயலாளர் முத்துக்குமாரை 98424 55765 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்." இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்