ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்த கோவை அண்ணா பல்கலை. திட்டம்
அதன் தொடக்கக் கட்டமாக ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்துவதற்கேற்ற தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க நிலையில் மாணவர்கள் வழக்கமான முறையில் விடைத்தாள்களில் விடைகளை எழுதுவார்கள். அது ஸ்கேன் செய்யப்பட்டு திருத்துவதற்கு அனுப்பப்படும். பின்னர். மாணவர்களே ஆன்லைன் மூலம் விடைத்தாள்களில் பதில்களை எழுதும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றார். தேர்வு நடந்ததிலிருந்து 30 நாட்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு இ-மெயில் மூலம் விடைத்தாள் நகல் அனுப்பி வைக்கப்படும். அத்துடன், அதனைத் திருத்திய ஆசிரியருக்கும் அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் அந்த விடைத்தாளின் பிரிண்ட் அவுட்டை எடுத்துப் பார்த்து, தேவைப்பட்டால், விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களுக்கும் இ-மெயில் முகவரி வழங்கப்படும். வினா வங்கி, மாணவர்களுக்கான மதிப்பெண்கள், பொதுவான அறிவிப்புகள் போன்றவை இ-மெயில் மூலம் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும். மதிப்பெண் சான்றிதழ்களையும் பட்டச் சான்றிதழ்களையும் காணாமல் தவறவிட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்கள் விரைவில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராதாகிருஷ்ணன்.