மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல், அறிவியல் ஆய்வக திறப்பு விழா
கீழக்கரை: கீழக்கரை கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கல் மற்றும் அறிவியல் ஆய்வக திறப்பு விழா நடந்தது. கிழக்குத்தெரு ஜமாத் தலைவர் சேகு அபுபக்கர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முகம்மது மீரா வரவேற்றார். தாளாளர் பி.ஜே.சாதிக் வாழ்த்தினார். நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, துணைத் தலைவர் ஹாஜா முகைதீன் சைக்கிள் வழங்கினர். முதுகலை ஆசிரியர் மோகன் நன்றி கூறினார். ஆசிரியர் அபுதாகிர் தொகுத்து வழங்கினார்.