உள்ளூர் செய்திகள்

கல்லுாரி மாணவியருக்கான கபடி போட்டியில் அரசலுார் நவரசம் கல்லுாரி சாம்பியன்

கோவை: பாரதியார் பல்கலை அனைத்து கல்லுாரி மாணவியருக்கான கபடி போட்டியில், அரசலுார் நவரசம் கலை அறிவியல் கல்லுாரி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 19 ஆண்டுகளாக கோபி பி.கே.ஆர்.,கலை அறிவியல் கல்லுாரி மட்டுமே முதலிடம் பெற்று வந்தது குறிப்பிடதக்கது. பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை சார்பில் அனைத்து கல்லுாரி மாணவியருக்கான கபடி போட்டி, கோபி பி.கே.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. 16 கல்லுாரிகள் நாக்அவுட்-லீக் முறையில் பங்கேற்றன. இறுதி லீக் போட்டியில், நவரசம் கல்லுாரி 25-12 புள்ளி கணக்கில் ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியையும்; 2வது போட்டியில், 12-10 புள்ளி கணக்கில் கோபி பி.கே.ஆர்.,கலை அறிவியல் கல்லுாரியையும்; 3வது போட்டியில், 20-17 புள்ளி கணக்கில் கோபி கலை அறிவியல் கல்லுாரியையும் வென்று முதலிடம் பிடித்தது. கோபி பி.கே.ஆர்.,கலை அறிவியல் கல்லுாரி 24-19 புள்ளி கணக்கில் ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியையும்; 15-10 புள்ளி கணக்கில் கோபி கலை அறிவியல் கல்லுாரியையும் வென்று இரண்டாமிடம் பிடித்தது. ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி 20-17 புள்ளி கணக்கில் கோபி கலை அறிவியல் கல்லுாரியை வென்று மூன்றாமிடம் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்