உள்ளூர் செய்திகள்

பள்ளி வளாகத்தில் உள்ள உயர்அழுத்த மின் கம்பத்தை அகற்ற கோரிக்கை

அதிகத்துார்: அதிகத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், உள்ள உயர் அழுத்த மின் கம்பத்தை அகற்ற, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது, அதிகத்துார் ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 110க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில், உயர் அழுத்த மின்கம்பி செல்லும் மின்கம்பம் ஒன்று, வகுப்பறை கட்டடம் அருகே அமைந்துள்ளது. தினமும் மாணவ, மாணவியர், மின் கம்பம் அமைந்துள்ள இடம் வழியாகத்தான், குடிநீர் குடிப்பதற்கு மற்றும் கழிப்பறைக்கு செல்ல வேண்டும். மேலும், வகுப்பறை கட்டடம் அருகே உள்ள மின் கம்பத்தை அகற்ற, பலமுறை மின் வாரியத்திற்கு மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறினார். எனவே, அசம்பாவிதம் நிகழும் முன், பள்ளி வகுப்பறை அருகே உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்