சென்னை பல்கலை தொலைதூர கல்வி முதுகலை படிப்பு தேர்வு முடிவு
சென்னை: சென்னை பல்கலை தொலைதூர கல்வி இயக்ககம் சார்பில், முதுகலை பட்டப் படிப்பு, தேர்வு முடிவு நாளை(செப்டம்பர் 6) வெளியாகிறது. இதுகுறித்த செய்திக் குறிப்பு: சென்னை பல்கலையின், தொலைதூர கல்வி இயக்ககம் சார்பில், கடந்த ஜூன் மாதம், எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., ஆகிய முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை வெளியாகின்றன. மாணவர்கள், நாளை இரவு, 8:00 மணி முதல், www.ideunom.ac.in மற்றும் www.unom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். இதில், ஏ12, ஏ13 மற்றும் சி13 ஆகிய தேர்வுகளை எழுதிய மாணவர்கள் மட்டும், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு தாளிற்கும் மறுமதிப்பீடு செய்ய, 750 ரூபாய் கட்டணம். இதற்கான விண்ணப்பங்களை, பல்கலை தொலைதூரக் கல்வி இயக்கக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.