உள்ளூர் செய்திகள்

சத்துணவு மையங்களில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் நேரில் ஆய்வு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஒன்றியத்தில் சத்துணவு மையங்களை மாவட்ட உதவி திட்ட அலுவலர் நேரில் ஆய்வு செய்தார். திருக்கோவிலூர் ஒன்றியத்தில் செயல்படும் சத்துணவு மையங்களை மாவட்ட உதவி திட்ட அலுவலர் சேகர், நேரில் ஆய்வு செய்தார். மாடாம்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சத்துணவு மையத்தை பார்வையிட்டு, பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். முட்டைகளை பாதுகாப்பாக வைப்பது குறித்தும், சமைக்கப்பட்ட உணவை மாணவர்களுக்கு வழங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக தலைமை ஆசிரியர் அல்லது உதவி ஆசிரியர்கள் சூழற்சி முறையில் பரிசோதிக்க வேண்டுமென அறிவுறுத்தினார். சமையல் அறையை சுத்தமாக வைத்திருப்பதை பி.டி.ஓ.,கள் அவ்வப்போது ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார். ஆய்வின் போது பி.டி.ஓ., ஜெய்சங்கர், உதவி பொறியாளர் தனபால், ஊராட்சி தலைவர் வேலாயுதம், புஷ்பவள்ளி உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்