உள்ளூர் செய்திகள்

பல்கலை கால்பந்து போட்டி; எத்திராஜ் கல்லூரி அணி சாம்பியன்

சேத்துப்பட்டு: பல்கலை கால்பந்து போட்டியில், எத்திராஜ் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை பல்கலைக்கு உட்பட்ட, ’பி’ மண்டல கால்பந்து போட்டி, சேத்துப்பட்டில் உள்ள, சென்னை பல்கலை மைதானத்தில் நடந்தது. இறுதி போட்டியில், எத்திராஜ் கல்லூரி அணி, 4-0 என்ற, கோல் கணக்கில், காயிதே மில்லத் அரசு கல்லூரி அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக நடந்த, அரையிறுதி போட்டியில், எத்திராஜ் கல்லூரி அணி, 7-0 என்ற, கோல் கணக்கில், சோகாட இகேடா கல்லூரி அணியை வென்று இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்