உள்ளூர் செய்திகள்

மாவட்ட அவிலான யோகாசன போட்டிகளில் தொடக்கப் பள்ளி மாணவர்கள் வெற்றி

ராமநாதபுரம்: மாவட்ட அவிலான யோகாசன போட்டிகளில் திருப்பாலைக்குடி யூசுப் ஹபீபா நினைவு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்று சாதனை படைத்தனர். பரமக்குடியில் நடந்த மாவட்ட அளவிலான யோகா போட்டியில், சாம்பியன் டூ சாம்பியன் பிரிவில் இப்பள்ளி மாணவர் மாயநிவேகனும், நான்காம் வகுப்பு மாணவி லத்திகாவும் முதல் பரிசு பெற்றனர். பொதுப்பிரிவில் 5 ம் வகுப்பு மாணவி புரோஸ்மியா, மாணவர்கள் மனோ, சமயசக்தி முதல் பரிசு பெற்றனர். சிறப்பு பிரிவில் 4 ம் வகுப்பு மாணவி முகிலா முதல் பரிசு பெற்றார். மாநில அளவிலான போட்டியில் இப்பள்ளியின் 5 ம் வகுப்பு மாணவர் மாயநிவேகன் மூன்றாம் பரிசும், மாணவி அழகுசெல்வி நான்காம் பரிசும் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்