உள்ளூர் செய்திகள்

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிக்கு ஆசிரியர்கள் களப் பயணம்

அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிக்கு ஆசிரியர்கள் களப்பயணம் மேற்கொண்டனர். மேல்மலையனூர் ஒன்றியத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு, மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கான உள்ளடக்கிய பாடம் குறித்து 5 நாள் பயிற்சி நடக்கிறது. பயிற்சியின் தொடர்ச்சியாக அவலூர்பேட்டையில் உள்ள ஹரிக்ஷா மன வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் சிறப்பு பள்ளிக்கு பி.ஆர்.சி.,மேற்பார்வையாளர் கலைவாணி தலைமையில் 60 ஆசிரியர்கள் களப்பயணம் மேற்கொண்டனர். தாளாளர் ரவி வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆறுமுகம், கோவிந்தராஜ், பயிற்சியாளர்கள் குழந்தைராஜ், சீலா, ஆரோக்ய மேரி, ராணி, தெரேசா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் சார்பில் மாணவர்களுக்கு ஒன்பதாயிரம் ரூபாய், மதிய உணவும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்