உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் கல்வி மற்றும் இதர திறமைகளை வளர்த்து கொண்டால் முன்னேறலாம்

ராஜபாளையம்: "மாணவர்கள் கல்வி மற்றும் இதர திறமைகளை வளர்த்து கொண்டால் முன்னேறலாம்", என ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் கூறினார். ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர். ஆரம்ப பள்ளி மற்றும் ஆண்கள் உயர்நிலை பள்ளி ஆண்டுவிழாவில் அவர் பேசியதாவது: பாதுகாப்பு காரணத்திற்காக, விமானநிலையம் சென்று விருந்தினரை, பிரதமர் அழைத்து வருவதில்லை. விதிவிலக்காக பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு சென்று ஒபாமாவை வரவேற்றார். அமெரிக்கா கல்வி, பணம், தொழில்நுட்பம் போன்றவற்றில் முன்னேறிய நாடு. அணுமின் உற்பத்தி தொழில்நுட்பம் பெற அமெரிக்கா உதவி அவசியம். ரஷ்யாவின் கிரையோஜெனிக் இன்ஜின் உதவியுடன் இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்ப திட்டமிட்டது. ரஷ்யா இன்ஜின் வழங்க மறுத்தது. 20 ஆண்டுகளுக்குப்பின், இந்தியாவே, அதேவகை இன்ஜின் தயாரித்து ராக்கெட் அனுப்பியது. நம் நாட்டை மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என, 500 ஆண்டுகள் ஆண்டனர். அவர்களை விரட்டுவதிலே நமது கவனம் இருந்தது. அமெரிக்கா, ஐரோப்பியர்கள் கல்விகற்று கண்டுபிடிப்பில் இறங்கினர். இதனால்தான் தெருவெல்லாம் பள்ளி துவங்க கூறினார் மகாகவி பாரதியார். தற்போது மாணவர்கள் கல்வி மற்றும் இதர திறமைகளை வளர்த்து கொண்டால் முன்னேறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்