உள்ளூர் செய்திகள்

சட்ட பல்கலையில், ராகிங் கொடுமை போலீஸ் வழக்கால் இயக்குனர் நீக்கம்

தமிழ்நாடு சட்ட பல்கலையின், சென்னை, பெருங்குடி வளாகத்தில், &'சீர்மிகு சட்ட பள்ளி&' என்ற பெயரில், சட்ட கல்லுாரி செயல்படுகிறது. பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களே, இங்கு சேர்க்கப்படுகின்றனர். பிற சட்ட கல்லுாரிகளை விட, இங்கு ஒழுக்கமும், கல்வித் தரமும் அதிகமாக இருக்கும் என, பெற்றோர் நம்புகின்றனர். அதிர்ச்சி : இந்த நம்பிக்கையை உடைத்தெறியும் வகையில், &'ராகிங்&' பிரச்னை அரங்கேறி வருகிறது. குறிப்பாக, &'ஜூனியர்&' மாணவர்களை, &'சீனியர்&'கள், மிகவும் கீழ்த்தரமாக, &'ராகிங்&' செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்த பிரச்னையை, சட்ட பல்கலை மற்றும் கல்லுாரி அதிகாரிகள், மூடி மறைத்து வந்துள்ளனர். துணை வேந்தர் தம்ம சூர்யநாராயண சாஸ்திரியிடம், மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில், பல முறை புகார் அளித்தும், உரிய விசாரணை நடத்தப்படவில்லை என, தெரிகிறது.இந்நிலையில், ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர், சென்னை, வேளச்சேரி போலீசில், ஆகஸ்ட், 20ல், புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, ஆறு மாணவர்கள் மீது, வழக்கு பதிவு செய்தனர்.   விசாரணை கமிட்டி : இதையடுத்து, போலீசாரின் நெருக்கடியால், வேறு வழியின்றி, சட்ட பல்கலை சார்பில், விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. முதலில், இந்த கமிட்டி விசாரணை நடத்தி, சீனியர் மற்றும் ஜூனியர் மாணவர்கள் என, இரு தரப்பினர் மீதும், குற்றச்சாட்டு கூறியது. பின், கவர்னர் அலுவலகம் தலையிட்டதால், மீண்டும் ஒரு கமிட்டி அமைத்து விசாரித்ததில், ராகிங் கொடுமை அரங்கேறியது அம்பலமாகி உள்ளது.இதையடுத்து, முதற்கட்டமாக, சீர்மிகு சட்ட பள்ளியின் இயக்குனர் பொறுப்பு வகித்த, நாராயண பெருமாள், அந்த பதவியில் இருந்து, நேற்று மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, ரகுநாத ரெட்டி, இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதைத் தொடர்ந்து, ராகிங் செய்த மாணவர்கள் நீக்கப்பட உள்ளதாகவும், ராகிங்கை கண்டுகொள்ளாத பேராசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், சட்ட பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. &'ராகிங்&' கொடுமை நடந்தது எப்படி? : கல்லுாரி மற்றும் விடுதி வளாகத்தில், சீனியர்கள் வரும் போது, எழுந்து நின்று, வணக்கம் சொல்ல வேண்டும். குரங்கு போல், குதித்து வந்து, தன் பெயரையும், படிக்கும் பிரிவையும் சொல்லி, &'சல்யூட்&' அடிக்க வேண்டும். மிகவும் ஸ்டைலாக, &'ஷூ&' அணியக் கூடாது. சீனியர்கள் முன்னிலையில், மாணவியரிடம் பேசக் கூடாது. சீனியர்கள் கேட்கும் எந்த பொருளானாலும், விடுதிக்கோ, கல்லுாரி வளாகத்துக்கோ வாங்கி வர வேண்டும். ரயில் மற்றும் பேருந்து நிலையம் அருகில், சீனியர் மாணவர்கள் அழைத்தால், உடனே சென்று, அவர்கள் சொன்ன வேலையை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்