உள்ளூர் செய்திகள்

புதிய கல்வி கொள்கையால் தி.மு.க.வினரின் கல்வி நிறுவனங்கள் காணாமல் போய்விடும்

கரூர்: &'&'புதிய கல்வி கொள்கை அமலுக்கு வந்தால் தி.மு.க.வினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் காணாமல் போய்விடும் என்பதற்காகஅதை எதிர்க்கின்றனர்&'&' என பா.ஜ. மாநில துணை தலைவர் அண்ணாமலை பேசினார்.கரூரில் பா.ஜ. பிரசார பிரிவு சார்பில் தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம் நடந்தது. பிரசார பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார்.மாநில துணை தலைவர் அண்ணாமலை பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில் பல்வேறு தரப்பினர்களிடம் கருத்து கேட்டு புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்தாம் வகுப்பு வரை அனைவரும் தாய் மொழியில் கற்க வேண்டும்.இதற்கு முன் எந்த கல்வி கொள்கையும் தாய் மொழியை கற்க வேண்டும் என்று கூறவில்லை. இங்கு ஸ்டாலின் மகள், தர்மபுரி எம்.பி., உள்பட தி.மு.க.,வினர் 42 பள்ளிகள் நடத்துகின்றனர். அதில் கட்டாயம் ஹிந்தி படிக்க வேண்டும். அங்கு தமிழில் பேசினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. புதிய கல்வி கொள்கை அமலுக்கு வந்தால் தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகள் காணாமல் போய்விடும் என்பதற்காக எதிர்க்கின்றனர்.நம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று புதிய கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு சார்பில் 2 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகள், மதுபானம் தயாரிப்பு ஆலைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக செயல்படும் கட்சியாகும்.முன்னாள் முதல்வர் கருணாநிதி நடத்தியது நாடக கம்பெனி ஸ்டாலின் நடத்துவது குடும்ப கம்பெனி. அவர்களால் புதிய கொள்கையை புரிந்து கொள்ள முடியாது. உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் லோக்சபாவில் கொண்டு வந்த சட்டம் எப்படி தி.மு.க. ஆட்சி வந்தால் எப்படி மாற்ற முடியும். ஆனால் &'நீட்&' தேர்வை ரத்து செய்வோம் என ஸ்டாலின் பொய்யான வாக்குறுதி அளிக்கிறார்.ஒவ்வொரு கல்வியாண்டும் 10 நாட்கள் பள்ளிக்கு புத்தகம் இல்லாமல் மாணவர்கள் வர வேண்டும். அந்த நேரத்தில் வீட்டுக்கு தேவையான தச்சு, எலக்ட்ரிக் போன்ற பயிற்சி அளிக்கப் படும். இதில் ஜாதி வேறுபாடு இல்லாமல் அனைத்து மாணவருக்கும் கற்று கொடுக்கும் போது அதில் எங்கு வந்தது குலக்கல்வி முறை என்று தெரியவில்லை. என் பிள்ளை மூன்றாவது மொழி கற்க கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார் என்ற பொதுமக்கள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்