உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வுக்கு பா.ஜ., காரணம்: அனைத்து கட்சி கூட்டத்தில் கண்டனம்

நீட் தேர்வு விவகாரத்தில் தற்போதைய சிக்கலுக்கு, தமிழக பா.ஜ., தான் காரணம் எனக்கூறி, அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி, கண்டனம் தெரிவித்துள்ளனர்.சென்னையில், திராவிடர் கழகம் சார்பில் நடந்த, அனைத்து கட்சி கூட்டத்தில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் என, 32 இயக்கங்கள் சார்பில், பிரதி நிதிகள் பங்கேற்றனர்.ம.தி.மு.க., சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற, அக்கட்சியின் துணை பொதுச்செயலர் மல்லை சத்யா கூறியதாவது:&'நீட் தேர்வு இல்லாமல் செய்தால், அதை ஆதரிப்போம்&' என, சட்டசபையில் ஒருபுறம் பேசுவது; மறுபக்கத்தில், தமிழக அரசு அமைத்திருக்கும், நீதிபதி ஏ.கே.ராஜன் குழு செயல்படுவதற்கு எதிராக வழக்கு போடுவது என, பா.ஜ., இரட்டை வேடம் போடுவதை, கூட்டத்தில் அனைவரும் சுட்டிக்காட்டினர்.&'நீட்&' விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதற்கு, தமிழக பா.ஜ.,வே காரணம் என்றும், கண்டனம் தெரிவித்தனர்.சட்ட ரீதியிலான போராட்டம், அரசு ரீதியிலான தொடர் முயற்சிகள், வெகுஜன போராட்டம் என, மூன்று வழிகளில், நீட் தேர்வு ரத்து என்ற அறிவிப்பு வரும் வரையில் போராடுவது என, எடுத்துரைத்தனர்.&'நீட் தேர்வு ரத்தானால் குறைந்தபட்ச அறிவில்லாதவர்கள் கூட, மருத்துவர்கள் ஆகி விடுவர். அதனால் தான், நீட் தேர்வை ஆதரிக்கிறோம்&' என, பா.ஜ., தரப்பில், நீதிமன்றத்தில் சொல்லியிருப்பது, மனிதாபிமானமற்ற செயல் என, பலரும் கண்டித்தனர்.தி.மு.க., சார்பில் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது, &'2015ல் உச்ச நீதிமன்றத்தில், மார்டன் பல் மருத்துவ கல்லுாரி வழக்கை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் அமர்வு, மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக, மாநில அரசு சட்டம் இயற்றலாம். &'அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்றதும், அச்சட்டம் அமலுக்கு வரலாம் என்று கூறியது.&' அந்த தீர்ப்பின் அடிப்படையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்பதற்கு, தமிழக அரசுக்கு முழு உரிமை இருக்கிறது.அரசியல் அமைப்பு சட்டமே, அதற்கு அதிகாரம் வழங்குகிறது. &'இதை மத்திய அரசு ஏற்பது தான், ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் உகந்தது&' என்றார். &'சில சட்டங்கள், இந்தியா முழுமைக்குமானவை அல்ல&' என்பதை குறிப்பிட்டு, நீதிபதி ஹரிபரந்தாமன் பேசினார்.தமிழக காங்., தலைவர் அழகிரி, &'ஏற்கனவே தமிழகத்தில், திருமண சட்டத்தைக் கொண்டு வந்து, அதற்கு மத்திய அரசின் அனுமதியையும் பெற்றது போல, நீட் தேர்வுக்கும் விலக்கு பெற, சட்டப் போராட்டம் நடத்த வேண்டும்&' என்றார். இவ்வாறு, மல்லை சத்யா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்