உள்ளூர் செய்திகள்

அரசு ஐ.டி.ஐ., மாணவியர் விடுதி: காணொளி மூலம் முதல்வர் திறப்பு

கடலுார்: கடலுார் அரசு ஐ.டி.ஐ., மாணவியர் விடுதியை காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.கடலுாரில் பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை சார்பில் அரசு ஐ.டி.ஐ., மாணவியர் விடுதி ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டது. இந்த கட்டடத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். விடுதியில் நடந்த விழாவில் கலெக்டர் அருண் தம்பு ராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் குத்து விளக்கேற்றினர். துணை மேயர் தாமரைச்செல்வன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரமிளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜ சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்