உள்ளூர் செய்திகள்

அண்ணாதுரை பிறந்த நாள் விழா கல்லூரி மாணவருக்கு பேச்சு போட்டி

நாமக்கல்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ல் நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில் மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடக்கிறது என கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 2023ம் ஆண்டு, தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி வரும் 15ல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடக்கிறது. காலை 9:30 முதல் 1:00 மணி வரை நடக்கும் இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.அண்ணாவும் மேடைபேச்சும், கடமை, கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம். விபரங்களுக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டடத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை, 04286-292164 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்