அரசு பள்ளிகளுக்கு தேவை தனியார் பங்களிப்பு கலெக்டர் பூங்கொடி அழைப்பு
திண்டுக்கல்: அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் முன்வர, கலெக்டர் பூங்கொடி அழைப்பு விடுத்துள்ளார்.திண்டுக்கல் சிப்காட் வளாகத்தில் நடந்த நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: இத்திட்டத்திற்காக https://nammaschool.tnschools.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் தங்கள் பகுதி அரசு பள்ளிகளை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட முன்வர வேண்டும்.அரசுடன், தனியார் ஒத்துழைப்பும் கிடைக்கும்போது. மாணவர்கள் கல்வித்தரம் மேம்படுவதோடு வாழ்க்கைத்தரம் உயரும், என்றார். நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் இயக்குநர் அஜித் மாதாய், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன், அனில் நிறுவன விற்பனை மேலாண்மை இயக்குநர் சுகுமார், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி மேலாளர் லுாக் அஸ்லகான் கலந்துகொண்டனர்.