இலவசம் வேண்டாம் - கல்வி கொடுங்கள்: ராமகிருஷ்ணமடத் தலைவர்
சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்று நாடு திரும்பியபோது, இலங்கை வழியாக பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் வந்திறங்கியதை நினைவு கூறும் வகையில், குந்துகால் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், நேற்று போற்றுதல் விழா நடந்தது. இதில் தலைமை வகித்து அவர் பேசியதாவது: விவேகானந்தர் கால்பட்டதால் வரலாற்றில் இடம் பெற்ற இந்த இடம், எதிர்காலத்தில் உலகத்தினர் அனைவரும் வந்து செல்லும் முக்கியத்துவம் பெறும். சகோதரத்துவம், பன்பாடு இல்லாத நாட்டில் அமைதி இருக்காது. கீழ்நிலையில் உள்ளவர்களை மேலே கொண்டுவர, கல்வி அவசியம். மக்களுக்கு இலவசங்கள் தருவதை தவிர்த்து, அனைவருக்கும் கல்வியை கொடுக்க வேண்டும். நாட்டில் பொருளாதார வளர்ச்சி, அரசியல் விஞ்ஞான வளர்ச்சியில் மேம்பாடு அடைய, மக்களுக்கு ஆன்மிக கலாசாரத்துடன் கூடிய கல்வி வழங்கவேண்டும். இவ்வாறு கவுதமானந்தா பேசினார்.மதுரை ராமகிருஷ்ணமடம் தலைவர் சுவாமி கமலாத்மானந்த மகராஜ் முன்னிலை வகித்தார். திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம் செயலர் சுவாமி திவ்யானந்த மகராஜ் வரவேற்றார். ராமகிருஷ்ண தபோவனம் தலைவர் சுவாமி சதானந்த மகராஜ், ஆர்.எஸ்.எஸ்., மூத்த பிரசாரக் சூரிய நாராயண ராவ், கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் உட்பட பலர் பேசினர். சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்று திரும்பிய நிகழ்ச்சி, மாணவர்களால் நடித்துக் காண்பிக்கப்பட்டது.