உள்ளூர் செய்திகள்

ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி

நாமக்கல்: முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளையொட்டி, வரும், 23ல், அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடக்கிறது&' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 2023ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளையொட்டி, வரும் 23ல், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், காலை, 9:30 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசு, 5,000, இரண்டாம் பரிசு, 3,000, மூன்றாம் பரிசு, 2,000 மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு, சிறப்பு பரிசு, 2,000 ரூபாய் வழங்கப்படும்.சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம் ஆகிய தலைப்புகளில், மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம்.விபரங்களுக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை, 04286- 292164 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்