உள்ளூர் செய்திகள்

கலந்தாய்வு முடிந்து பல மாதங்களாகியும் பணி நியமன ஆணை கிடைக்கவில்லை

ஸ்ரீவில்லிபுத்தூர்: 2022ல் நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தேர்வில் வெற்றி பெற்று வேளாண் துறையில் கலந்தாய்வு முடிந்து பல மாதங்களாகியும் இன்று வரை பணி நியமன ஆணை கிடைக்காமல் தவித்து வருகின்றனர், தேர்வான இளநிலை உதவியாளர்கள்.2022ல் 10 ஆயிரம் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் 2023 மார்ச்சில் வெளியிடப்பட்டது. தேர்வானவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று தற்போது பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரிகின்றனர்.ஆனால் வேளாண்மைத்துறையில் 2023 ஜூலையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு 187 பேர் இளநிலை உதவியாளராக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இன்று வரை துறையில் இருந்து பணி நியமன ஆணை கடிதம் வழங்கப்படவில்லை.இதனால் அரசு வேலை கிடைத்தும் பணியில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக வேளாண் துறை தலைமை அலுவலகத்தில் கேட்டால் டி.என்.பி.எஸ்.சி.,க்கு இளநிலை உதவியாளர் பட்டியல் திருத்தத்திற்கு அனுப்பி உள்ளதாக கூறுகின்றனர். அங்கு தொடர்பு கொண்டால் சரியானபதில் கிடைப்பதில்லை.தங்களுடன் தேர்வு எழுதிய பல ஆயிரம் பேர் இன்று அரசு பணியில் சேர்ந்து சம்பளம் வாங்கும் நிலையில், தாங்கள் தேர்வாகியும் இன்று வரை பணி நியமன ஆணை கிடைக்கவில்லையே, அரசு வேலைக்கு செல்ல முடியலையே என்ற விரக்தியில் பல மாவட்டங்களை சேர்ந்த 187 இளநிலை உதவியாளர்கள் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாக தேர்வான இளநிலை உதவியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்