உள்ளூர் செய்திகள்

தலைமை ஆசிரியர் மீது புகார் பள்ளி எதிரே சாலை மறியல்

டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே கே.என்.பாளையத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு பள்ளியில் மொத்தம் ஆறு ஆசிரியைகள் பணிபுரிகின்றனர்.இதில் இருவர் நிரந்தரமானவர்கள். மற்ற நான்கு பேரும், பள்ளி மேலாண்மை குழுவால் நியமிக்கப்பட்டவர்கள். இந்நிலையில் தலைமை ஆசிரியர், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, பள்ளி எதிரே பெற்றோர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பங்களாபுதுார் போலீசார் சமாதானத்தை மக்கள் ஏற்காததால், சத்தி வட்டார கல்வி அலுவலர் தேவகி, சத்தி தாசில்தார் மாரிமுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறவே, சாலை மறியலை கைவிட்டனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: புதிய தலைமை ஆசிரியர் வந்த பிறகுதான், பள்ளியில் சேர்க்கை விகிதம் அதிகரித்தது. மேலும் தனது சொந்த செலவில், பள்ளியில் சிசிடிவி கேமரா அமைத்து, பாதுகாப்பு வசதியும் செய்தார். பள்ளி வளர்ச்சியிலும் அக்கறை காட்டி வருகிறார். இதனால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் காழ்ப்புணர்ச்சியால் பெற்றோர்களை துாண்டி விட்டு, மறியலில் ஈடுபட வைத்துள்ளனர். இவ்வாறு கூறினர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்