உள்ளூர் செய்திகள்

ஏமாற்றுகிற சராசரி அரசு; ஜாக்டோ - ஜியோ கடிதம்

சென்னை: கோரிக்கைகளை பரிசீலித்து, நல்ல முடிவை அறிவிக்காவிட்டால், போராட்டக் களத்தில் நிற்பது தவிர்க்க இயலாது என, அரசு ஊழியர், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அமைப்பு, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது.முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாததால், எங்களின் பொறுமை சுக்கு நுாறாகி விட்டது. எதிர்க்கட்சியினர் எங்களை இளக்காரப்படுத்தியும், உங்களை தலை மேல் வைத்து கொண்டாடியதை சிறுமைப்படுத்தியும் பேசி வருகின்றனர்.தங்கள் அரசும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ஏமாற்றுகிற சராசரி அரசாக இருப்பது, வேதனை அளிக்கிறது. எங்களுக்காக எங்களுடன் நின்று போராடிய நீங்களே, எங்கள் நியாயங்களை புரிந்து கொள்ள மறுப்பது துரதிருஷ்டவசமானது.உரிமைகள் தர மறுக்கும் இடங்களில், போராட்டங்களை கையில் எடுப்பதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை. பல கட்ட போராட்டங்களை நடத்திய பின்னும், முதல்வர் எங்களை அழைத்து பேசாததும், கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராததும், எங்களை போராட்டத்திற்கு தள்ளியுள்ளது.எங்களை அழைத்து, எங்கள் கோரிக்கைகளில் முக்கியமான சிலவற்றையேனும் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. இயலாதபட்சத்தில் நாங்கள் போராட்டக் களத்தில் நிற்பது தவிர்க்க இயலாதது ஆகிவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்