உள்ளூர் செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு மாநாடு மாணவர் சேர்க்கை அதிகரிக்க முடிவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில், பள்ளி மேலாண்மை குழு தவைர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, திம்மாவரம் தனியார் திருமண மண்டபத்தில், பள்ளி மேலாண்மை குழு மாநாடு கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.இதில், 16 பள்ளி மேலாண்மை குழுக்களுக்கும், பள்ளி மேலாண்மை குழுவை வலுப்படுத்த, சிறப்பான முறையில் பங்களிப்பு வழங்கிய கருத்தாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.இந்த மாநாட்டில், பள்ளிகளை மேம்படுத்துவது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மாணவர்கள் வருகையை அதிகரிக்க வேண்டும். மேலும், இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்.பள்ளி அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால், போலீசார் மூலம் நடவடிக்கை எடுத்து, கடைகள் மூடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் உதயகுமார், சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இந்த மாநாட்டில், பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர்கள், கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம், பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்